நிதி அமைச்சகம்
திருத்தியமைக்கப்பட்ட வருமான வரி தகவல் அளிப்போர் பரிசுத் திட்டம் 2018ஐ வெளியிட்டது வருமான வரித் துறை
Posted On:
01 JUN 2018 1:09PM by PIB Chennai
கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கவும் வரி ஏய்ப்பைக் குறைக்கவும் வருமான வரித் துறை மேற்கொள்ளும் முயற்சிகளில் மக்கள் பங்களிப்பை பெறும் நோக்கத்துடன் “வருமான வரி தகவல் பரிசுத் திட்டம், 2018” என்ற பெயரிலான புதிய பரிசுத் திட்டம் 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முந்தைய பரிசுத் திட்டத்திற்கு பதிலாக வருமான வரித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லது விசாரணை இயக்குனரகத்திற்கு வருவாய் அல்லது இந்தியாவில் உள்ள சொத்துக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வரி ஏய்ப்பு குறித்து வருமான வரி சட்டம் 1956ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புள்ள தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும்.
மேலும் இந்தியாவில் வரி செலுத்த வேண்டியவர்கள் வெளிநாடுகளில் ஈட்டும் வருவாய் மற்றும் வைத்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரித்து மதிப்பீடு செய்வதற்காகவும் வரியை மீட்பதுடன் அபராதம் விதிப்பது மற்றும் தண்டிப்பது உள்ளிட்ட இதர நடவடிக்கைகளை எடுக்கவும் கறுப்பு பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்பு சட்டம் 2015ஐ இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கறுப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்பு சட்டம் 2015 ந் கீழ் நடவடிக்கைக்கு உரித்தான வருவாய் மற்றும் சொத்துக்கள் குறித்து மக்கள் தகவல் அளிக்க ஊக்குவித்து அவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய பரிசுத் திட்டத்தில் ரூ. 5 கோடி வரையிலான பரிசுத் தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புள்ள ஆதாரங்களை ஈர்க்கும் வகையில் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் பரிந்துரைக்கப்பட்ட வகையில் கறுப்பு பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி வசூல் சட்டம் 2015ன்கீழ் நடவடிக்கைக்கு உகந்த குறிப்பிடத்தக்க அளவு வருவாய் மற்றும் சொத்துக்களுக்கான வரி ஏய்ப்பு குறித்து தகவல் அளித்து பரிசினைப் பெறலாம்.
இந்த திட்டத்தின்கீழ் தகவல் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வருமான வரித்துறை தலைமை இயக்குனர் (விசாரணை) அல்லது இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் அளிக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பரிசு பெறுவதற்கான தகுதி வெளிநாட்டினருக்கும் உண்டு. தகவல் அளிக்கும் நபரின் அடையாளம் வெளியிடப்பட மாட்டாது என்பதுடன் ரகசியம் உறுதியாக பராமரிக்கப்படும்.
திருத்தியமைக்கப்பட்ட பரிசு திட்ட விவரங்கள் வருமான வரி தகவல் அளிப்போர் பரிசுத் திட்டம் 2018ல் உள்ளது. இதன் பிரதிகள் வருமான வரி அலுவலகங்களில் கிடைப்பதுடன் வருமான வரித்துறையின் இணைய தளமான www.incometaxindia.gov.in என்ற முகவரியிலும் உள்ளது.
(Release ID: 1534120)
Visitor Counter : 296