மத்திய பணியாளர் தேர்வாணையம்
குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு – 2018
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2018 10:39AM by PIB Chennai
மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையம், குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு – 2018 ஐ இந்தியா முழுவதும் 03.06.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தவுள்ளது. இதுநாள் வரையிலும், 50% தேர்வர்கள் ஆணையத்தின் வலைத்தளத்திலிருந்து (http://www.upsc.gov.in) தங்கள் மின்னணு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளனர். இதுவரையிலும் தங்கள் மின்னணு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு விரைவில் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக அதாவது முற்பகல் தேர்வுக்கு காலை 09.20 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 02.20 மணிக்கும் தேர்விடத்திற்குள் செல்வதற்கான அனுமதி முடியும் என்பதைத் தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நுழைவுநேரத்திற்குப் பிறகு தேர்விடத்திற்குள் தேர்வர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மின்னணு அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்ட தேர்விடத்தைத் தவிர்த்து வேறெங்கும் தேர்வெழுத தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1533490)
வருகையாளர் எண்ணிக்கை : 179