மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு (2017-18) தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றிய பொது மக்களின் கருத்தைக் கோருகிறது

Posted On: 18 MAY 2018 5:54PM by PIB Chennai

மக்களவை உறுப்பினர் திரு அனுராக் சிங் தாகூர் தலைமையிலான, தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு, மக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றிய பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து வருகிறது.

இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பொதுவாக மக்களிடமிருந்தும், குறிப்பாக நிபுணர்கள், தொழில்முறை வல்லுநர்கள், அமைப்புகள், சார்பு நிறுவனங்கள், இதனுடன் தொடர்புடையவர்களிடமிருந்தும் விரிவான ஆலோசனைகளையும், யோசனைகளையும் வரவேற்கிறது.

குழுவுக்கு மனு அளிக்க விரும்புபவர்கள், தங்களது கருத்துகள் மற்றும் யோசனைகள் அடங்கிய 2 பிரதிகளை (ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ) இயக்குநர், (C&IT), மக்களவை செயலகம் அறை எண் G-1, நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடம், புதுதில்லி - 110001 (தொலைபேசி எண்கள். 011-23034388/5235) சீலிடப்பட்ட மனுக்களை இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு வார காலத்திற்குள் அனுப்பலாம். இந்த மனுவை comit@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அல்லது (Fax No. 011-23792726) என்ற தொலை நகலிக்கும் அனுப்பலாம்.

குழுவில் சமர்ப்பிக்கப்படும் மனு நிலைக்குழுவின் ஆவணமாக கருதப்படும் என்பதால் அது மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அதில் அடங்கிய விவரங்களை பிறருக்கு தெரியப்படுத்துவது குழுவின் உரிமையை மீறுவதாக அமையும்.

குழுவுக்கு மனு அனுப்பியதுடன், வாய்மொழி ஆதாரங்களை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் உள்ள மக்களவை செயலகத்தை முன்கூட்டியே அணுகலாம். இருப்பினும், இந்த விஷயத்தில் குழுவின் முடிவே இறுதியானதாகும்.

                                ******



(Release ID: 1532999) Visitor Counter : 137


Read this release in: English , Marathi , Gujarati