குடியரசுத் தலைவர் செயலகம்
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் : சேவைகள் குறித்த நான்காவது உலக கண்காட்சியை தொடங்கி வைத்தார்: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய திறன் குழு அதற்கு சேவைத் துறையில் இயற்கையான ஆதாரங்களை அளிக்கிறது என்று அவர் கூறினார்
Posted On:
15 MAY 2018 1:19PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், மும்பையில் இன்று (15.05.2018) நான்காவது உலக சேவைகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சேவைகள் துறையில் 12 சாம்பியன் பிரிவுகளுக்கான வலைதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் 100 நாடுகளிலிருந்து இந்த உலக கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள சுமார் 500 சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்பதாக கூறினார். இந்த முயற்சிக்காக குடியரசுத் தலைவர் மத்திய வர்த்தகத் தொழில்துறை அமைச்சகம், மகாராஷ்டிர மாநில அரசு, இந்தியத் தொழில்கள் இணையம், சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்த கண்காட்சி இந்திய சேவைகள் துறையை மேம்படுத்தி, பெரிதுபடுத்தி உலக சேவைத் துறையில் இந்தியாவின் ஈடுபாட்டை விரிவாக்கும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சேவைத் துறையில் 12 சாம்பியன் பிரிவுகளுக்கான வலைதளம் தொடங்கப்பட்டிருப்பது புதிய சிறந்த முடிவு என்றும், இதன் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி உலக பொருளாதாரத்திற்கும் பயன் ஏற்படும் என்றும், மேலும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார்.
குடியரசுத் தலைவரின் முழு உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
==========
(Release ID: 1532192)
Visitor Counter : 132