மத்திய அமைச்சரவை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலின்கீழ் ராஜஸ்தானில் பட்டியலிடப்பட்ட பகுதிகளை அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 25 APR 2018 1:11PM by PIB Chennai

1981 பிப்ரவரி 12 ஆம் தேதியிட்ட அரசியலமைப்பு உத்தரவு (சி.ஓ) 114 ஐ ரத்துசெய்து புதிய அரசியலமைப்பு உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலின்கீழ் ராஜஸ்தானில் பட்டியலிடப்பட்டப் பகுதிகளை அறிவிக்கப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு உத்தரவு பிறப்பித்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் பயன்களை ராஜஸ்தானின் பட்டியலினப் பழங்குடிமக்கள் பெறுவதை உறுதிசெய்யும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலின்கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட பகுதிகளை விரிவாக்கம் செய்யவேண்டும் என்று ராஜஸ்தான் அரசு கேட்டுகொண்டிருந்தது.

பயனாளிகள்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் பயன்களை ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, துங்கர்பூர், பிரதாப்கார் மாவட்டங்களிலும் உதய்ப்பூர், ராஜ்சமந்த், சித்தூர்கார், பாலி, சிரோஹி மாவட்டங்களின் சிலபகுதிகளிலும் வசித்துவரும் பட்டியலினப் பழங்குடியினர் பெறுவார்கள்.

பன்ஸ்வாரா, துங்கர்பூர், பிரதாப்கார் எனும் மூன்று மாவட்டங்களில் உள்ள மொத்தப் பகுதிகளும் உதய்ப்பூர், ராஜ்சமந்த், சித்தூர்கார், பாலி, சிரோஹி மாவட்டங்களின் 9 தாலுகாக்கள், ஒரு ஒன்றியம், 227 கிராமங்களை உள்ளடக்கிய 46 கிராமப் பஞ்சாயத்துகளும் ராஜஸ்தான் மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்படும்.

பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம் காரணமாகக் கூடுதல் நிதி எதுவும் தேவைப்படாது. பட்டயலிடப்பட்ட பகுதிகளில் விரைவான வளர்ச்சிக்குக் கூடுதல் செலுத்துவதற்கு தற்போது உள்ள மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்குள் பழங்குடியினருக்கான நீண்டகாலத்  துணைத்திட்டத்தின் (தற்போது பழங்குடியினருக்கான உடனடித் துணைத்திட்டமான மறுபெயர் சூட்டப்பட்டுள்ளதன்) பகுதியாக இது இருக்கும்.

பின்னணி:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலின் {பிரிவு 244(1)} பத்தி 6 (1) ன் படி ‘பட்டியலிடப்பட்ட பகுதிகள்’  என்பதன் பொருள் “இத்தகைய பகுதிகளை ஓர் உத்தரவின் மூலம் பட்டியலிடப்பட்ட பகுதிகளாக குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம்”. அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலில் பத்தி 6 (2)ல் உள்ள அம்சங்களின்படி மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்தபிறகு மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட எந்தப் பகுதியையும் ஒர் உத்தரவின் மூலம் எந்த நேரத்திலும் அதிகரிக்கச் செய்யலாம். சம்பந்தப்பட்ட மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்து இந்தப் பத்தியின்கீழ் வெளியிடப்பட்ட எந்த மாநிலம் அல்லது மாநிலங்கள் தொடர்பான உத்தரவு அல்லது உத்தரவுகளை ரத்துச் செய்து பட்டியலிடப்பட்ட பகுதிகள் என மறுவரையறை செய்யப்பட்டதற்குப் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.

பட்டியலிடப்பட்ட பகுதிகள் முதன்முறையாக 1950 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குப் பட்டியலிடப்பட்ட பகுதிகளைக் குறிப்பிட்டு அரசியலமைப்பு உத்தரவுகள் 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. மறுவரையறை / புதிய மாவட்டங்கள் உருவாக்க மற்றும் 2011  ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பட்டியலினப் பழங்குடியினரின் மக்கள் தொகையில் மாற்றங்கள் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட பகுதிகளை விரிவுப்படுத்த ராஜஸ்தான் அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

*****


(Release ID: 1530189) Visitor Counter : 403