நிதி அமைச்சகம்

மாநிலங்களுக்கு உள்ளே மின்னணு வே-பில்கள் நடைமுறையை இம்மாதம் 20 –ம் தேதி முதல் மேலும் 6 மாநிலங்கள் கடைப்பிடிக்க உள்ளன

Posted On: 18 APR 2018 3:43PM by PIB Chennai

ஜி.எஸ்.டி. சபையின் முடிவின்படி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறை 2018 ஏப்ரல், முதல் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. 2018 ஏப்ரல் 15 நிலவரப்படி மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறையை ஆந்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, உத்திரப்பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

2018 ஏப்ரல் 20 –ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்து கீழ்கண்ட மாநிலங்களில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்டுகிறது.

  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • ஹரியானா
  • ஹிமாச்சலப்பிரதேசம்
  • திரிபுரா
  • உத்திராகான்ட்

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.



(Release ID: 1529538) Visitor Counter : 145