மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தியாவில் பயிலுங்கள் வலைதளத்தை திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் நாளை தொடங்குகின்றனர்

प्रविष्टि तिथि: 17 APR 2018 4:30PM by PIB Chennai

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, “இந்தியாவில் பயிலுங்கள்” என்னும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதளத்தை (www.studyinindia.gov.in) இந்திய ஹேபிடட் மையத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி புதன்கிழமை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் முன்னிலையில், வெளியுறவு அமைச்சர் திரு சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சத்ய பால் சிங் கலந்து கொள்கிறார்.

     தெற்காசியா, ஆப்பிரிக்கா, காமன்வெல்த் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 30 நாடுகளிலிருந்து மாணவர்கள் இந்தியாவின் 150 தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விண்ணப்பிக்க இந்த வலைதளம் பயன்படும்.

------


(रिलीज़ आईडी: 1529415) आगंतुक पटल : 354
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी