நிதி அமைச்சகம்

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் மத்திய அரசின் இணைப் பங்களிப்பாக 121 கோடி ஒதுக்கீடு; அடல் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பதிவு செய்த சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 2018 ஏப்ரல் 12-ஆம் தேதி நிலவரப்படி 97.60 லட்சத்தைத் தாண்டியது

Posted On: 17 APR 2018 11:39AM by PIB Chennai

நாடுமுழுவதிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மண்டலக் கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சல்துறை ஆகிய சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலமாக அடல் ஓய்வூதியத் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் தி்ட்டத்தின்கீழ் பதிவுசெய்துள்ள மொத்தச் சந்தாதார்களின் எண்ணிக்கை 2018 ஏப்ரல் 12-ஆம் தேதி நிலவரப்படி 97.60 லட்சத்தைத் தாண்டியது.

     31.03.2016-க்கு முன்பாகப் பதிவுசெய்த, ரூ.1,000 வரையிலான அதிகபட்சப் பங்களிப்பு செலுத்தும் சந்தாதாரர்களுக்கு 50 சதவீதத் தொகையை இணைப் பங்களிப்பாக மத்திய அரசு  இத்திட்டத்திற்கு வழங்குகிறது. இந்தச் சந்தாதாரர்கள் 2015-16 முதல் 2019-20 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு இணைப் பங்களிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வருமானவரி செலுத்தாத, இதர எந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் உறுப்பினராக இல்லாதவர்கள் மத்திய அரசின் இணைப் பங்களி்ப்பைப் பெறத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

     இதனைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2016-17ஆம் நிதியாண்டுக்குச் சுமார் 14 லட்சம் தகுதிவாய்ந்த சந்தாதாரர்களுக்கு ரூ.120.92 கோடியை மத்திய அரசு இணைப்பங்களிப்பாக வழங்கியுள்ளது. மார்ச் 2017வரை அடல் ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிப்பு நிலுவையில் உள்ள சந்தாதாரர்களுக்கு இணைப் பங்களிப்பு வழங்கப்படமாட்டாது. மத்திய அரசின் இணைப்பங்களிப்பைப் பெறுவதற்கு, இந்தச் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கைச் சரிசெய்துகொள்ளுமாறு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கணக்குகள் ஒழுங்காக உள்ளவர்களுக்கு மத்திய அரசின் இணைப் பங்களிப்பு வழங்கப்படும்இது சந்தாதாரர்களின் வங்கிச் சேமிப்புக் கணக்குகளில் செலுத்தப்படும்.

     60 வயதான சந்தாதாரர், மாதத்திற்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை ஓய்வூதியம் பெறுவதற்கு அடல் ஓய்வூதியத் திட்டம் குறைந்தபட்ச உத்தரவாதம் வழங்குகிறது.

-------------



(Release ID: 1529320) Visitor Counter : 100