விண்வெளித்துறை

ஐஆர்என்எஸ்எஸ் – II எனும் கண்காணிப்புச் செயற்கைக் கோளினை பிஎஸ்எல்வி – சி41 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 12 APR 2018 11:05AM by PIB Chennai

இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் பிஎஸ்எல்வி -  சி41 தனது 43-வது பாய்ச்சலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (12.04.2018) 1425 கிலோ கிராம் எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் – II கண்காணிப்புச் செயற்கைக் கோளினை வெற்றிகரமாகச் செலுத்தியது.

முதலாவது செலுத்துத் தளத்திலிருந்து திட்டமிட்டப்படி இந்திய நேரப்படி அதிகாலை மணி 4.04-க்கு பிஎஸ்எல்வி – சி41 ஏவப்பட்ட பின் சுமார் 19 நிமிடங்களில் 281.5 கிலோ மீட்டர் தூரத்தி்ல் பூமிக்கு மிக அருகில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் அடைந்தது. இதைத் தொடர்ந்து நடுநிலைக் கோட்டிற்கு 19.2 டிகிரி கோணத்தில் பூமியிலிருந்து மிக அதிகத் தொலைவான 20,730 கிலோமீட்டரில் பிஎஸ்எல்வியிலிருந்து ஐஆர்என்எஸ்எஸ் – II பிரிந்து சென்றது.

பிரிந்த பின் ஐஆர்என்எஸ்எஸ் – II-ல் உள்ள சூரியச் சக்தி மின்கலங்கள் தாமாகவே செயல்படத் தொடங்கின. கர்நாடகாவின் ஹசனில் உள்ள இஸ்ரோவின் முதன்மைக் கட்டுப்பாட்டு அறை செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது. வரும் நாட்களில் செயற்கைக் கோளினைத் திட்டமிட்டபடி நடுநிலைக் கோட்டிலிருந்து 29 டிகிரி சாய்வோடு கிழக்குத் தீர்க்க ரேகையில் 55 டிகிரியிலும், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணிகள் முதன்மைக் கட்டுப்பாட்டு அறை கவனித்துக் கொள்ளும்.

“இந்தியப் பல்வகைக் கண்காணிப்பு” (நேவிக்) முறையின் புதிய செயற்கைக்கோளாக ஐஆர்என்எஸ்எஸ் – II உள்ளது. இந்தியப் பிராந்தியக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் முறை என்றும் அறியப்படும் நேவிக், இந்திய மண்டலத்திலும், இந்தியாவைச் சுற்றியுள்ள 1500 கிலோமீட்டர் பகுதியிலும் உள்ள நிலைமை குறித்த தகவல்களை வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள சுயேட்சையான மண்டலக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் முறையாகும்.

ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோளுக்கான தொலைவு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்றதாக நேவிக்கின் பகுதியாக நாடு முழுவதும் பல இடங்களில் கண்காணிப்பு அம்சங்களை உருவாக்குதல் மற்றும் கொண்டு செல்லுதல், செயற்கைக்கோள் கட்டுப்பாடு, ஒருங்கிணைப்பு நேரம் போன்றவற்றுக்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை பிஎஸ்எல்வி 52 இந்தியச் செயற்கைக்கோள்களையும், வெளிநாடுகளிலிருந்து 237 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1528809) வருகையாளர் எண்ணிக்கை : 296
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी