மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் சர்வதேசச் சூரியச் சக்திக் கூட்டமைப்பு இடையே தலைமையிட (நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நாடு) ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 11 APR 2018 2:02PM by PIB Chennai

இந்தியாவுக்கும் சர்வதேசச் சூரியச் சக்திக் கூட்டமைப்புக்கும் இடையே கையெழுத்தான, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் நாடு தொடர்பான தலைமையிட ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2018 மார்ச் மாதம் 26-ஆம் தேதி கையெழுத்தாகியது.

இந்தியா மற்றும் சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு இடையே செயல்பாட்டு ஏற்பாடுகளை இந்தத் தலைமையிட ஒப்பந்தம் உருவாக்கும். இது சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு, சர்வதேச அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகச் செயல்பட பெரிதும் உதவும். சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு உருவாக்கமானது, சூரியசக்தித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளை அதில் ஈடுபடுத்தவும் பெரிதும் உதவும்.

                                ----



(Release ID: 1528656) Visitor Counter : 131