மத்திய அமைச்சரவை

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக இந்தியாவிற்கும், இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 11 APR 2018 2:04PM by PIB Chennai

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக, இந்தியாவிற்கும், இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பலன்கள்:

     புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, ராஜீய ரீதியான கடவுச்சீட்டு வைத்திருப்போர் விசா இல்லாமலேயே வந்து செல்வதற்கும், இங்கிலாந்திற்குச் சட்ட விதிமுறைகளின்படி, பயணம் செய்வோருக்கான விசா நடைமுறைகளைத் தளர்த்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

     ஒரு நாட்டைச் சேர்ந்தவர் மற்ற நாட்டில் தங்கியிருப்பதற்குச் சட்டப்பூர்வமான ஆதாரம் இல்லாமல் இருந்தால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மனதிருப்தி ஏற்படும் வகையில் ஆய்வு செய்த பின்னர் அவர்களைத் திருப்பிஅனுப்புவதை உறுதி செய்யும்.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள மற்ற நாட்டவரை, குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் திருப்பிஅனுப்புவதற்கான நடைமுறைகளை முறைப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

 

 



(Release ID: 1528655) Visitor Counter : 157