உள்துறை அமைச்சகம்
நாளை சில குழுக்கள் பந்த்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்
Posted On:
09 APR 2018 3:20PM by PIB Chennai
நாளை ஏப்ரல் 10ம் தேதி பாரத பந்த் நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் சில குழுக்கள் அறிவித்துள்ளதை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பை முடுக்கிவிடும்படியும் தடையுத்தரவை மீறுதல் உள்ளிட்ட அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவைப்பட்டால், மேற்கொள்ளும்படியும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது. உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ நேருவதைத் தடுப்பதற்காகப் பதற்றம் ஏற்படும் எல்லா இடங்களிலும் தீவிர ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுரை கூறியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் தத்தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
*******
(Release ID: 1528351)
Visitor Counter : 163