பிரதமர் அலுவலகம்

நான்கு மாநிலங்களில் திறந்தவெளி மலக் கழிப்பு இல்லாத இலக்குகள் குறித்து பிரதமர் ஆய்வு

Posted On: 13 MAR 2018 7:02PM by PIB Chennai

உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, ஜம்மு கஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று (13.3.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்தாலோசனை நடத்தினார். இந்த மாநிலங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நிலைக்கான இலக்குகளின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

 தூய்மை இந்தியா இயக்கம், சுகாதார இலக்குகள் ஆகியவற்றில்  நடைபெற்றுள்ள பணிகள் சார்ந்த கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்த பணிகளை செய்து முடிப்பதற்கு மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளோம் என்பதைவிட சிறந்த ஊக்குவிப்பு இல்லை என்று அவர் கூறினார். திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க மாவட்ட நிலைகளில் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

  இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார். மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் இந்த வகையில் மேலும்பெரிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய பங்காற்றமுடியும் என்று பிரதமர் கூறினார்.

=========



(Release ID: 1524231) Visitor Counter : 117