மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கும் ஹெல்லினிக்-கும் இடையே புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 MAR 2018 7:23PM by PIB Chennai

இந்தியாவுக்கும் ஹெல்லினிக்-கும் இடையே புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் விளக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்-க்கும் ஹெல்லினிக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு நைக்கோஸ் கோட்ஜியாஸ்-க்கும் இடையே புதுதில்லியில் 2017 நவம்பரில் கையெழுத்தானது.

புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொடர்பான பரஸ்பரம் பயனளிக்கும் தொழில்நுட்ப இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பு அடித்தளத்தை உருவாக்குவது இந்த ஒப்பந்தத்தின்  நோக்கமாகும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒத்துழைப்பு தொடர்பான துறைகள் சார்ந்த விஷயங்களை ஆய்வு செய்தல், கண்காணித்தல், விவாதித்தல் ஆகியவற்றுக்கென கூட்டுப்பணிக்குழு ஒன்று உருவாக்கப்படும். நிபுணத்துவ பரிமாற்றம் மற்றும் தகவல் கட்டமைப்பு உருவாக்குதல் ஆகியவற்றையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டது.


(Release ID: 1523146)
Read this release in: English , Urdu , Assamese , Telugu