மத்திய அமைச்சரவை

சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்த இந்தியா – ஜோர்டான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 FEB 2018 6:27PM by PIB Chennai

மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு குறித்த இந்தியா – ஜோர்டான் இடையோன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்க்கண்ட துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது.

  1. அனைவருக்கும் சுகாதார வசதி செய்து தருதல்
  2. சுகாதார அமைப்புகள் தொடர்பான ஆளுகை
  3. சுகாதாரத்துறை சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  4. சுகாதாரத்துறை ஆராய்ச்சி
  5. தேசிய சுகாதாரப் புள்ளி விவரம்
  6. சுகாதார நிதியளிப்பு மற்றும் சுகாதாரப் பொருளாதாரம்
  7. நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தல்
  • viii. புகையிலைக் கட்டுப்பாடு
  1. காசநோய் அறிதல், சிகிச்சை மற்றும் சிகிச்சை வழங்குதல்
  2. மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் கட்டுப்பாடு
  3. பரஸ்பரம் ஏற்புடைய இதர துறை ஒத்துழைப்புகள்

இந்த ஒத்துழைப்பு விவரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படுவதை  கண்காணிக்கவும் பணிக்குழு அமைக்கப்படும்.

                           -----


(रिलीज़ आईडी: 1522339) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , Assamese , Gujarati