மத்திய அமைச்சரவை
மனித ஆற்றல் துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா-ஜோர்டான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Posted On:
28 FEB 2018 6:26PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மனித ஆற்றல் துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா-ஜோர்டான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஜோர்டானில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைப் பிரதிபலிப்பதாகவும், இரு நாடுகளிடையிலான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. மேலும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில், வெளிப்படைத்தன்மையை அதிகரித்து முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆன்-லைன் முறையைப் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். அதற்குப் பின்னர் தானாக ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும், கூட்டுத் தொழில்நுட்பக் குழு மூலமாகக் கண்காணிப்பை மேற்கொள்ளவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
(Release ID: 1522258)
Visitor Counter : 143