மத்திய அமைச்சரவை
அரியானா, குருகிராமில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிலம் அருகே பேருந்து நிறுத்தி வைக்கும் இடம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 FEB 2018 1:18PM by PIB Chennai
அரியானாவில் குரு கிராமில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிலத்துடன் ஒன்றோடு ஒன்று தழுவிய நிலையில் உள்ள மூன்று சென்ட் நிலத்தில் அரியானா மாநிலம், குருகிராமில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அருகே பேருந்து நிறுத்தி வைக்கும் இடம் அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2011 –ம் ஆண்டு அரியானா அரசுக்கு இந்த மூன்று ஏக்கர் நிலத்தைப் பாதுகாப்பு அமைசச்கத்திற்கு வழங்கியது. தற்போது இந்த நிலத்தை மறுபடியும் மாநில அரசுக்கே வழங்கவுள்ளதால் ரூ.1,82,719 ரொக்கத்தை அரியானா அரசு மீண்டும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பின்குறிப்பு:அரியானா, குருகிராம் மாவட்டத்தின் பினோலா மற்றும் பிலாஸ்பூரில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஜெய்பூரை நோக்கி செல்லும் தில்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையி்ல் தேசியப்பாதுகாப்புப் படையின் தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தேசியப் பாதுகாப்புக் கல்வி, பாதுகாப்பு மேலாண்மை, மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் துறைகளை இந்தப் பல்கலைக்கழகம் மேம்படுத்தி பிரபலப்படுத்தும். தேசியப் பாதுகாப்பு உள் மற்றும் வெளியுறவு சார்ந்த அனைத்து பரிமாணங்கள் குறித்த கொள்கைச் சார்ந்த ஆய்வுகளை பல்கலைக்கழகம் ஊக்குவிக்கும். முப்படைகள் மட்டுமின்றி துணை ராணுவப்படை, புலனாய்வுப் பிரிவு, தூதரக அலுவலர்கள், கல்வியாளர்கள், உத்திசார் திட்டமிடுவோர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நட்பு நாடுகளின் அலுவலர்கள் இடையே ஒத்துழைப்பையும் கலந்துரையாடல்களையும் இந்தப் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கும். இந்த மூன்று சென்ட் நிலம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமானது. பொதுமக்கள் நலன் கருதி, தில்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பேருந்து நிறுத்தி வைக்கும் இடத்தை அமைக்க பரிந்துரைச் செய்தது. பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக பேருந்து நிறுத்தி வைக்கும் இடத்தை அமைக்க, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூன்று ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளது. இது குறுகிராம்-தில்லி இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இந்தியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 12,000 – 15,000 நபர்கள் வந்து செல்வார்கள்.
******
(Release ID: 1521178)