மத்திய அமைச்சரவை

இந்தியா மொரோக்கோ இடையேயான ரயில்வேத் துறை உடன்படிக்கை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 1:20PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரயில்வேத் துறையில் நீண்ட கால ஒத்துழைப்பிற்கான இந்தியா மற்றும் மொரோக்கோ தேசிய ரயில்வே அலுவலகத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் பின்னேற்பு ஒப்புதல் ஆகும். ஒத்துழைப்பு உடன்படிக்கை டிசம்பர் 14, 2017 அன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கை கீழ்வரும் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பைக் கொண்டுவரும்

  • பயிற்சி மற்றும் ஊழியர்கள் வளர்ச்சி
  • நிபுணர் இயக்கங்கள், அணுபவப் பரிமாற்றம் மற்றும் ஊழியர் நலன்
  • நிபுணர்கள் பரிமாற்றம் உட்பட இருதரப்புத் தொழில்நுட்ப உதவி

பின்னணி:

மத்திய ரயில்வேத் துறை தனது துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கைகளை பல்வேறு அந்நிய அரசுகளுடனும், தேசிய ரயில்வே அமைப்புகளுடனும் கையெழுத்திட்டுள்ளது. இதில் அதிவேக சரக்கு போக்குவரத்து தாழ்வாரம், ஏற்கெனவே உளள வழித்தடங்களை வேகப்பாதைகளாக மேம்படுத்துதல், உலகத்தர நிலையங்களை ஏற்படுத்துதல் கனரகச் சரக்குப்  போக்குவரத்து, ரயில் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் ஆகியத் துறைகள் ஒத்துழைப்பிற்கு கண்டறியப்பட்டுள்ளன. ரயில்வேத் தொழில்நுட்பம் மற்றும் இயக்கம், அறிவுப்பரிமாற்றம், தொழில்நுட்பம் சார்ந்தப் பயணங்கள், பயிற்சி மற்றும் கருத்தரங்கள், இருத்தரப்பிற்கும் ஏற்ப பயிலரங்கங்கள் ஆகியவை குறித்த தகவல் பரிமாற்றம் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், ரயில்வேத் துறையில் உள்ள சமீபத்திய வளர்ச்சி மற்றும்  அறிவுப் பரிமாற்றத்திற்கும் கலந்துரையாடல்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்ப நிபுணர்கள் பரிமாற்றம், அறிக்கை மற்றும் தொழில்நுட்ப ஆவணங்கள், பயிற்சி மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்பத் துறைகள் குறித்த கருத்தரங்குகள் /  பயிலரங்குகள், அறிவுசார் பரிமாற்றத்திற்கான கலந்துரையாடல்கள் ஆகியவற்றிற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.


 

*****



(Release ID: 1521066) Visitor Counter : 134