மத்திய அமைச்சரவை
இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் துனிஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மத்திய அமைச்சரவையில் எடுத்துரைப்பு
प्रविष्टि तिथि:
07 FEB 2018 8:14PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் விவகாரங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் துனிஷியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, புதுதில்லியில் 30.10.2017-ல் கையெழுத்தானது.
இந்திய இளைஞர்கள் மத்தியில் சர்வதேச கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினரிடையே எண்ணங்கள் மதிப்பீடுகள் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை உதவும். இதன் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த இயலும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இதன்படி, கீழ்க்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படும்:
- இளைஞர் பரிமாற்றத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்;
- சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளுக்கு அழைப்பிதழ்களை பரிமாறிக் கொள்வது;
- புத்தகங்கள், திரைப்படங்கள், அனுபவங்கள், ஆய்வு மற்றும் பிற தகவல்களை பரிமாறிக் கொள்வது;
- இளைஞர் முகாம்கள், இளைஞர் திருவிழாக்கள் மற்றும் பிற இளைஞர் ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், கல்விப் பயணங்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான சிறு பணிமனைகள் மற்றும் பயிலரங்கங்கள் போன்றவை.
***
(रिलीज़ आईडी: 1519866)
आगंतुक पटल : 163