பிரதமர் அலுவலகம்
100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு (இஸ்ரோ) பிரதமர் பாராட்டு
Posted On:
12 JAN 2018 11:13AM by PIB Chennai
100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு (இஸ்ரோ) பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
“பி.எஸ்.எல்.வி.-யை இன்று வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். புத்தாண்டில் இவ்வெற்றியானது, விண்வெளி தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்கள், நமது குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் போன்றவர்களுக்கு நன்மைகளை கொண்டு வரும்.
இஸ்ரோவால் செலுத்தப்பட்ட 100வது செயற்கைக்கோள், அதன் மகத்தான சாதனைகளையும், இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கான பிரகாசமான எதிர்காலத்தையும் பறைசாற்றுகிறது.
இந்தியாவின் வெற்றியின் பலன்கள் நமது பங்குதாரர்களுக்கும் கிடைக்கப் பெறும்! இன்று செலுத்தப்பட்ட 31 செயற்கைகோள்களில், 6 பிற நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் அடங்கும்”, என பிரதமர் கூறியுள்ளார்.
***
(Release ID: 1516786)
Visitor Counter : 153