மத்திய அமைச்சரவை

15வது நிதிக் கமிஷன் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 NOV 2017 4:05PM by PIB Chennai

15வது நிதிக் கமிஷன் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு விதி 280 (1)ன் கீழ் இது அரசியலமைப்பு கடமையாகும். 15வது நிதிக்கமிஷனுக்கான விதிமுறைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

பின்னணி:

அரசியல் சட்டத்தின் விதி 280 (1) நிதிக் கமிஷன் “ இந்த அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் நிறுவப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் போதும் அல்லது தேவை என குடியரசுத் தலைவர் கருதும் போது முன்னதாகவோ அமைக்கப்பட வேண்டும்” இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு பொதுவாக ஒரு நிதிக் கமிஷன் அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடையும் முன்னதாகவே அடுத்த நிதிக் கமிஷன் அமைக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 14 நிதிக் கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 02.01.2013 அன்று 14வது நிதிக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஏப்ரல் 1, 2015 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பரிந்துரைகளை அளிக்க இது அமைக்கப்பட்டது. டிசம்பர் 15, 2014 அன்று கமிஷன் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. 2019-20 நிதியாண்டு வரை 14வது நிதிக்கமிஷனின் பரிந்துரைகள் செல்லுபடியாகும். அரசியல் சட்ட விதிகளைப் பொருத்த வரை 15வது நிதிக் கமிஷன் பரிந்துரைகள் 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஐந்தாண்டுகளுக்கு அளிக்க வேண்டும். அது தற்போது நிலுவையில் உள்ளது.
 

*****



(Release ID: 1510505) Visitor Counter : 321


Read this release in: Kannada , English , Gujarati