பிரதமர் அலுவலகம்

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதியரசர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு; பிரதமர் வாழ்த்து

Posted On: 21 NOV 2017 10:32AM by PIB Chennai

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதியரசர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதியரசர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துகள். அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது நம் அனைவருக்கும் பெருமையான தருணம்.

சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மீண்டும் தேர்வு பெற்றதற்கு, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் மற்றும் அவரது மொத்த அணிக்கும் மற்றும் தூதரங்களின் அயராத முயற்சிக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா மீது ஐ.நா.பொதுச் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் அளித்த ஆதரவுக்கும், கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
 


(Release ID: 1510305)
Read this release in: English , Gujarati , Telugu , Kannada