• Sitemap
  • Advance Search
Others

பன்முகத்தன்மையின் கொண்டாட்டம்: கலாச்சாரத்தின் மூலம் ஒற்றுமையை வளர்த்தல்

Posted On: 06 NOV 2024 8:33PM

தில்லியில் கைவினைக்கலைஞர்கள் திருவிழா 2024 பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அது வண்ணமயமான காட்சிகளாலும் நுணுக்கமான கைவினைப் பொருட்களாலும் உற்சாகமூட்டும் நாட்டுப்புற இசையின் ஒலிகளாலும் உயிரோட்டம் பெற்றுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், நவம்பர் 5 முதல் 15 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தனித்துவமான கண்காட்சி இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கலைகளின் அசாதாரணமான பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. மேலும், தங்களுடைய திறமையான கைகளால் இந்தியப் பாரம்பரியத்தின் ஆன்மாவை உயிர்ப்பிக்கும் கைவினைஞர்களை இது கௌரவிக்கிறது.

தில்லியில் நடைபெறும் கைவினைக்கலைஞர்கள் திருவிழா 2024 இந்தியாவின் செழுமையான கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது 16 மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்களை 105 அரங்குகளின் வாயிலாக ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு அரங்கும் சம்பந்தப்பட்ட பிராந்தியப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் தனித்துவமிக்க பாரம்பரிய கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த ஆண்டின் திருவிழா இந்தியாவின் கலைப்பாரம்பரியத்தின் துடிப்புமிக்க தொகுப்பாக அமைந்துள்ளது. வடக்கு, தெற்கு, வடகிழக்கு, மேற்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த தயாரிப்புகள் இதில் இடம் பெறும். அரங்குகளின் மூலம் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமிக்க அழகியல், கைவினைத்திறன், மற்றும் கலாச்சார நுணுக்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இங்கு படம் பிடித்துக் காட்டப்படுகின்றன. உலோக கைவினைப் பொருட்கள், மரவேலைப்பாடுகள், பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள், மண்பாண்டங்கள், ஜவுளி மற்றும் பல் கண்காட்சிகள் மூலம் இந்தத் திருவிழா இந்தியாவின் பல்வேறு கலைப் பாரம்பரியங்களை முன்னிலைப்படுத்துவது மட்டுமின்றி அனைத்துப் பிராந்தியங்களைச் சேர்ந்த கைவினைக்கலைஞர்கள், ஒருங்கிணைவதற்காக ஒரு பொதுவான தளத்தை அளிப்பதன் மூலம் ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது.  பட்டியல் சமூகத்தினர், இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலை சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு சமூகங்களின் இந்த இணக்கமான ஒருங்கிணைப்பு, உள்ளடக்கம், கலாச்சார பெருமை மீதான இந்தத் திருவிழாவின் உறுதிப்பாட்டை இது சுட்டிக்காட்டுகிறது. மேலும், ஒவ்வொரு கைவினைஞரும் தங்கள் படைப்புகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளரிடம் கண்ணியமான முறையில், சமர்ப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், உத்திசார்ந்த ஆதரவின் மூலம், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. கைவினைக்கலைஞர்கள், தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும், தேவையான முக்கிய தளங்களை வழங்கி ஒரு கருவியாக செயல்படுகிறது. 2001-ம் ஆண்டு முதல் பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கைவினைஞர்களுக்காகவே பிரத்யேகமாக தில்லி ஹாட், இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, சூரஜ்குண்ட் கைவினைத் திருவிழா ஆகிய இடங்களில் இந்த அமைச்சகம் கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறது.

 

பல்வேறு திட்டங்களின் கீழ் இந்தக் கண்காட்சிகளில் பயனாளிகளுக்கு கட்டணமின்றி கடைகள் வழங்கப்படுகின்றன. இம்முயற்சி விளிம்பு நிலை குழுக்களை ஆதரித்து அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி கைவினைஞர்களுக்கு நகர்ப்புறம் மற்றும் சர்வதேசச் சந்தைகளில் மதிப்பு வாய்ந்த அறிமுகத்தையும் அளிக்கிறது. இது பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த முயற்சிகளின் தாக்கம் விரிவானதாகவும், மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்துள்ளது. இக்கண்காட்சி வாயிலாக ஏராளமான பயனாளிகள் சிறந்த நன்மைகளைப் பெற்றுள்ளனர். குறிப்பாக தில்லி ஹாட்டில் பங்கேற்பாளர்கள் சிறந்த விற்பனையைச் செய்துள்ளனர். இத பல்வேறு திட்டங்கள் மூலம் பெற்ற கடமைகளை திருப்பிச் செலுத்த உதவுகிறது.

இசை, நடனம், கதை சொல்லலின் சங்கமம்

இக்கண்காட்சி மாலை நேரங்களில், இந்தியாவின் நிகழ்த்துக் கலைகளுக்கான உயிரோட்டமிக்க தளமாக மாறுகிறது. ஒவ்வொரு மாலையும், இந்தியாவின் பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை, கதை சொல்லல், ஆகியவற்றை பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். இந்நிகழ்ச்சிகள்  காட்சிப்படுத்தப்பட்ட கைவினைப் பொருட்களுக்கு உயிர் அளிக்கின்றன. இதன் மூலம் பார்வையாளர்கள் ஒவ்வொரு படைப்பின் பின்னணியிலும் உள்ள கலைத்திறனை மட்டுமின்றி அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அனுபவிக்க முடிகிறது. இது ஒரு வெறும் கண்காட்சியாக மட்டுமில்லை  என்பதை, கைவினைக்கலைஞர்கள், சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட  மாலைநேர நிகழ்ச்சிகள் நினைவூட்டுகின்றன.  இது இந்தியாவின் உயிருள்ள பண்பாட்டு பாரம்பரியத்தின் வழியான ஒரு பயணமாகும்.

இந்தியாவின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துதல் 

கைவினைக்கலைஞர்கள் சந்திப்பு 2024, அனைவரையும் உள்ளடக்குதல் என்பதாக அமைந்துள்ளது. திறமையான கைவினைஞர்களுடன் துப்புரவுத் தொழிலாளர்கள், பட்டியல் சமூகத்தினர் உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்களையும் இக்கண்காட்சி பெருமையுடன் இடம் பெறச் செய்கிறது. அனைவரையும் உள்ளடக்குதலை ஊக்குவிப்பதன் மூலம் இக்கண்காட்சி கைவினைஞர்களை தங்கள் வேலையில் பெருமையுறச் செய்கிறது.  மேலும் அவர்களுக்கு பெரும்பாலும் கிடைக்காத அங்கீகாரத்தையும் நிதி ஆதரவையும் அளிக்கிறது. இது போன்ற தளங்கள் மூலம் கைவினைக்கலைஞர்கள் சங்கமம் அதிகாரமளிக்கும் அம்சமாக மாறுகிறது. அனைத்து கைவினைஞர்களின் கைவினைத் திறனும் மதிக்கப்படுவதையும் ஒவ்வொரு கதையும் கேட்கப்படுவதையும் உறுதி செய்கிறது.

கைவினைக்கலைஞர்கள்: இந்திய பாரம்பரியத்தின் ஆன்மா

தொழில்மயமாக்கலால் இயங்கும் உலகில் கைவினைக்கலைஞர்கள் சங்கமத்தில் உள்ள கைவினைக்கலைஞர்கள் கையால் உருவாக்கப்படும் மரபுகளின் அழகுக்கும் தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லப்பட்ட ஞானத்திற்கும் ஒரு சான்றாக உள்ளனர். இக்கைவினைக்கலைஞர்கள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் ஆவர். தங்கள் சமூகங்களுக்கு தனித்துவமான நுட்பங்களையும் செயல்களின் பாதுகாப்பு இந்தியாவின் மரபுகள் நிலைத்திருப்பதை உறுதி செய்கின்றன. கைவினைக்கலைஞர்கள் சங்கமம் என்பது இந்த விலைமதிப்பற்ற மரபுகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றுக்கு உயிர் அளிக்கும் கைவினைஞர்களை கௌரவிப்பதற்கான ஒரு இயக்கமாகும்.

கலை மனங்களைச் சந்திக்கிறது

பார்வையாளர்கள் கடைகளைப் பார்வையிடும் போது கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றும் மற்றவற்றைவிட மேலானவையாகும்.  அது வரலாற்றின் ஒரு பகுதியாகவும் சமூக வாழ்வின் பிரதிபலிப்பாகவும் கலாச்சாரப் பெருமையின் சின்னமாகவும் விளங்குகிறது. தில்லி ஹட்டில் நடைபெறும் கைவினைக்கலைஞர்கள் சங்கமம் 2024 இந்தியக் கைவினைஞர்களின் கதைகள், திறன்கள் மற்றும் மரபுகளில், மக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள  அனுமதிக்கிறது. இது இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தை வரையறுக்கும் வளமான பன்முகத்தன்மைக்கான பாராட்டைப் பெறுகிறது.

இக்கண்காட்சி ஒரு கொண்டாட்டமாகவும் பரிமாற்றமாகவும் திகழ்ந்து இந்த உயிரோட்டமிக்க கைவினைப் பொருட்கள் தொடர்ந்து செழிக்கும் என்பதற்கான ஒரு அம்சமாகும். இக்கண்காட்சியின் மூலம் இந்தியா தனது கைவினைஞர்களைக் கௌரவிக்கிறது. அனைவரையும் உள்ளடக்குதலை ஆதரிக்கிறது. மேலும் பன்முகத்தன்மையில் ஒற்றுமை உள்ளது என்பதை மட்டும் நினைவூட்டுகிறது. இந்த உணர்வை இந்தியப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் என்றும் வளரச் செய்கிறது.

***

PKV/IR/KPG/KR

(Features ID: 158267) आगंतुक पटल : 18
Provide suggestions / comments