Others
ஸ்மார்ட் மின் கழிப்பறைகள்: இந்தியா முழுவதும் நகர்ப்புற சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்துதல்
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம், தொழில்நுட்ப அடிப்படையிலான கழிப்பறைகள் பொது சுகாதாரத்தையும் வசதியையும் மேம்படுத்துகின்றன.
Posted On:
18 SEP 2024 2:27PM
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கான இந்தியாவின் தேடல் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. இது சுகாதாரத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் புதுமையான தீர்வுகளால் உந்துதல் பெறுகிறது. 2014 அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய பொது சுகாதார வசதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவின் நகர்ப்புறங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், தூய்மை இந்தியா இயக்கம் நகரங்களில் 6.36 லட்சம் சமூக மற்றும் பொது கழிப்பறைகளை ஒருங்கிணைத்து, நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்து, 'தூய்மையே சேவை' பிரச்சாரம் அதன் ஏழாவது ஆண்டைக் கொண்டாடும் போது, "இயற்கையின் தூய்மை, கலாச்சாரத்தின் தூய்மை " என்ற கருப்பொருளின் கீழ், தொழில்நுட்பம் சார்ந்த, பயனர்களுக்கு ஏற்ற சுகாதார தீர்வுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் முக்கிய முன்னேற்றங்களில் ஒன்று ஸ்மார்ட் மின் கழிப்பறைகளின் எழுச்சி ஆகும். இது நகர்ப்புறங்களில் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

லூ-கஃபேக்களை உருவாக்குவதன் மூலம் ஸ்மார்ட் கழிப்பறை புரட்சிக்கு ஹைதராபாத் நகரம் தனித்துவமான அம்சத்தை கொண்டுவந்துள்ளது. இந்தப் புதுமையான வசதிகள் ஒரு பொது கழிப்பறை மற்றும் ஒரு கஃபேவை இணைக்கின்றன; இது மக்கள் புத்துணர்ச்சியடைய ஒரு இடத்தை மட்டுமல்லாமல், சுவைக்கவும் ஒரு சிறந்த சூழலை வழங்குகிறது. கழிப்பறை பின்புறத்தில் அமைந்துள்ளது; முன்னால் ஒரு கஃபே உள்ளது. இது வெளியே செல்லும் மக்களுக்கு வசதியான தீர்வாக அமைகிறது. மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட லூ-கபேக்கள், பொது சுகாதாரத்தை மக்களுக்கு முற்றிலும் புதிய முறையில் வழங்குகிறது.
இதைப் பின்பற்றி, மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியின் மூலம் நகரம் முழுவதும் 26 இடங்களில் கழிப்பறைகளை கட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட் கழிப்பறைகள் நவீன வசதிகள் மற்றும் மின்னணு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளதால் அவை பராமரிப்பை எளிதாக்கி பயன்பாட்டை மேம்படுத்துகின்றன. கதவைத் திறப்பதன் மூலம் செயல்படுத்தப்படும் தானியங்கி ஃப்ளஷிங், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி அறைகள், குரல் உதவியாளர்கள், தானியங்கி ஃப்ளஷிங் சென்சார்கள் போன்ற அம்சங்களுடன், இந்த வசதிகள் பொது சுகாதாரத்திற்கு ஒரு புதிய அளவுகோலை கொடுக்கின்றன.

நாக்பூரில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்துவமான இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் ஸ்மார்ட் மின் கழிப்பறைகள், பாலின அடிப்படையிலான புரிதலுடன் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதை பிரதிபலிப்பதாக உள்ளன. இந்த வசதிகள் தானியங்கி ஃப்ளஷிங் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவி கதிர்களால் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. மேலும் நாணய அடிப்படையிலான அணுகலுடன் செயல்படுகின்றன. இது சுகாதாரம் மற்றும் அணுகலை உறுதி செய்கிறது. பூரியின் மலாட்டிபட்பூர் பேருந்து நிலையம் ஒரு படி மேலே சென்று, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் கழிப்பறைகளை அமைத்துள்ளன. அவை வைரஸ் மற்றும் பாக்டீரியா இல்லாத சூழலை உறுதி செய்வதற்காக புற ஊதா கதிர் விளக்குகளைக் கொண்டுள்ளன. துப்புரவுத் தொழில்நுட்பத்திற்கான ஒரு புதிய தரநிலையை அமைக்கும் வகையில், பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய இந்த வசதி இந்தியாவின் கிழக்கு பகுதியில் இந்தப் பிராந்தியத்தில்தான் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் போன்ற பிற நகரங்கள், அதன் உயிரியல் பூங்காவில் ஸ்மார்ட் ஷீ கழிப்பறை போன்ற ஸ்மார்ட் மின் கழிப்பறைகளை அமைத்துள்ளன. இது சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம், எரியூட்டும் கருவி, குழந்தைக்கு உணவளிக்கும் நிலையம் போன்ற நவீன வசதிகளும் உள்ளன.

இந்தியா முழுவதும், ஸ்மார்ட் மின் கழிப்பறைகள் பொது சுகாதார கட்டமைப்பை மறுவடிவமைத்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கின்றன. பிம்ப்ரி சிஞ்ச்வாட்டின் கழிப்பறைகள், ஹைதராபாத்தின் லூ-கஃபேக்கள் அல்லது பூரியில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வசதிகள் மூலம், நகர்ப்புற சுகாதாரத்தின் எதிர்காலம் புத்திசாலித்தனமாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். இந்த முன்முயற்சிகள் பொது உள்கட்டமைப்பில் மாற்றம் கண்டு வரும் ஒரு புதிய சகாப்தத்தை பிரதிபலிக்கின்றன. அங்கு மேம்பட்ட தொழில்நுட்பம் நகர்ப்புற மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து, சுகாதார வசதிகள் செயல்படுவதை மட்டுமல்லாமல் பெருமை மற்றும் வசதியின் ஆதாரமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
****
PD/PKV/KR
(Features ID: 158241)
आगंतुक पटल : 16
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English