Culture & Tourism
மகா கும்பமேளா- 2025-ல் தூய்மை கங்கை மற்றும் காதி இந்தியா அரங்கங்களின் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணங்கள்
Posted On:
18 JAN 2025 8:21PM
2025 மகா கும்பமேளாவில் தூய்மை கங்கை அரங்கம்:
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தால் மகா கும்பமேளா 2025-ல் அமைக்கப்பட்டுள்ள 'தூய்மை கங்கை' அரங்கம், 'தூய்மை கங்கை' திட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு தகவல் கண்காட்சியாக அமைந்துள்ளது. இந்த முன்முயற்சி, கங்கை நதியைப் பாதுகாக்கவும் புனரமைக்கவும் தொழில்நுட்பம், சமூக ஈடுபாடு, நிலைத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்த அரங்கம், சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதிலும், உள்ளூர் சமூகங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் இத்திட்டத்தின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் புனித நதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உத்திசார் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

சுற்றுச்சூழல் பொறுப்பையும் கங்கை நதியை தூய்மையுடன் பராமரிப்பதையும் நினைவூட்டுவதாக ஒரு பக்கம் தூய்மையான தண்ணீரையும் மற்றொரு பக்கம் மாசுபட்ட தண்ணீரையும் மனம்கவரும் வகையில் சித்தரிக்கின்ற ஆற்றல்மிக்க கற்பனையாக சிவபெருமானின் மணல் சிற்பம்.

நதியின் முகத்துவாரம், சுற்றியுள்ள கட்டடங்கள் ஆகியவற்றின் நுட்பமான விவரங்களை வெளிப்படுத்துகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாரணாசி படித்துறைகளின் மனம் கவரும் மாதிரி வடிவம்.

கங்கை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்வையைளர்கள் ஆர்வமுடன் கற்கவும் புத்தக விரும்பிகளுக்கு புகலிடமாகவும் அமைந்துள்ள தேசிய புத்தக அறக்கட்டளை (என்பிடி) வாசிப்பு முனையம்.

கயிலாய மலை உச்சியில் சிவபெருமான் சிலையும், இமயமலையின் தாவரங்களை சித்தரிக்கும் துடிப்புமிக்க வடிவமைப்பும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

“கங்கையின் புலிகள்” என்று அறியப்படுகின்ற கங்கை நதியின் டால்ஃபின் மாதிரிகள் உள்ளூர் உயிரினங்களை காட்சிப்படுத்தும் அரங்கில் பெருமிதத்துடன் நிற்கின்றன.

கங்கை நதியின் பலவகை மீன்கள் கல்வி நோக்கத்திற்காகவும், பாதுகாப்பு முயற்சிகளுக்காகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“நீரே உயிர்” என்ற முழக்கம் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தால் ஜல் ஜீவன் இயக்கத்தின் சாராம்சம் அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காதி உத்சவ்
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தால் மகா கும்பமேளா 2025-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, காதி இந்தியா அரங்கம் , காதிக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளூர் கைவினைப்பொருட்கள், ஜவுளிகள், உள்நாட்டுத் தொழில்களில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அரங்கம், பாரம்பரியம், நிலைத்தன்மை, கைவினைத்திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுவதோடு, ஒற்றுமையை வளர்ப்பதிலும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் காதியின் பங்கு குறித்த ஆழமான பார்வையையும் வழங்குகிறது. மகா கும்பமேளாவின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இது, உள்ளூர் தொழில்களையும் நிலையான நடைமுறைகளையும் ஊக்குவிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

பிரயாக்ராஜ் காதி உத்சவ் கண்காட்சியின் அழகிய சித்தரிப்பு, காதி மீதான இந்தியாவின் நேசத்தையும், பிரதமர் நரேந்திர மோடியின் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’ முன்முயற்சியின் கீழ் அதன் மாற்றமிகு பயணத்தையும் வெளிப்படுத்துகிறது.

உள்ளூர் கைவினைஞர்கள் திறனையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த காதி உத்சவ் கண்காட்சிக்கு பார்வையாளர்களின் வருகை.

காதி உத்சவ் – 2025-ல் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மையப் பொருளான ‘தற்சார்பு’ என்பதை எடுத்துரைக்கும் வகையில், மகாத்மா காந்திக்கு மரியாதை.

காதி உத்சவின் கடை ஒன்றில் துணிகளை ஆய்வுசெய்யும் வியாபாரிகளின் அருகமைக் காட்சி.
இந்தியாவின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், நீடிக்கத்தக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், 2025 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 26 வரை இதில் மக்கள் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்வு, நிலைத்தன்மை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் அதே வேளையில், உள்ளூர் தொழில்களை வளர்ப்பதில் தேசத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கிறது.
***
SMB/PLM/LDN/PD
(Features ID: 158171)
आगंतुक पटल : 19
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English