Culture & Tourism
நம்பிக்கையின் பயணத்தில் 35 கோடி ஆன்மாக்கள்
வசந்த பஞ்சமியில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நீராடல்
Posted On:
03 FEB 2025 8:18PM
|
தேதி
|
மொத்த யாத்திரீகர்களின் எண்ணிக்கை
|
|
14 ஜனவரி 2025
|
3.5 கோடி +
|
|
17 ஜனவரி 2025
|
7 கோடி +
|
|
19 ஜனவரி 2025
|
8 கோடி +
|
|
23 ஜனவரி 2025
|
10 கோடி +
|
|
27 ஜனவரி 2025
|
14.5 கோடி +
|
|
28 ஜனவரி 2025
|
19.5 கோடி +
|
|
31 ஜனவரி 2025
|
31 கோடி +
|
|
3 பிப்ரவரி 2025
|
35 கோடி +
|
2025-ம் ஆண்டின் மகா கும்பமேளா ஒர் ஆன்மீக மற்றும் கலாச்சார காட்சியாக மாறியுள்ளது. மொத்தம் 35 கோடிக்கும் அதிகமான பக்தர்கள், பிப்ரவரி 3 2025 வரை புனித நீராடல் சடங்குகளில் பங்கேற்றுள்ளனர். வசந்த பஞ்சமியின் புனித நாளில், 2.33 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தின் புனித நீராடியுள்ளனர். இது மகா கும்பமேளாவின் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. பல்வேறு மாநிலங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்வைக் கொண்டாடுவதில் கைகோர்த்ததால், மரியாதை, உற்சாகம் மற்றும் மிகப்பெரிய ஒற்றுமை உணர்வால் வளிமண்டலம் நிரம்பியது.

வசந்த பஞ்சமி பருவங்களின் மாற்றத்தைக் குறிக்கிறது. இது, இந்து புராணங்களில் அறிவின் தெய்வமான சரஸ்வதியின் வருகையைக் கொண்டாடுகிறது. வசந்த பஞ்சமியின் முக்கியத்துவத்தை கௌரவிப்பதற்காக, கல்பவாசிகள் துடிப்பான மஞ்சள் நிற உடையில் தங்களை அலங்கரித்து, இந்த மங்களகரமான நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றனர்.
புனித சங்கமத்தின் காட்சி அசாதாரணமானது. சங்கமத்தின் கரைகள் முழுவதுமாக பக்தர்களால் நிரம்பியிருந்தன. ஆற்றின் புனித மணல் மனிதக் கடலுக்கு அடியில் மூழ்கியிருந்ததால் அதனைக் காணமுடியவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான தில்லி, ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம், பீகார், கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சர்வதேசப் பார்வையாளர்களுடன் கைகோர்த்து, மகா கும்ம்மேளாவின் உள்ளடக்கிய உலகளாவிய ஒற்றுமையின் உணர்வுக்குப் பங்களித்தனர். சக்திவாய்ந்த கோஷங்களை உச்சரித்து, கங்கை, சரஸ்வதி, யமுனை ஆகியவற்றின் சக்திவாய்ந்த ஓட்டத்துடன் பக்தியின் குரல்களைக் கலந்து, கோடிக்கணக்கானவர்களின் கூட்டு ஆர்வத்துடன் காற்று எதிரொலித்தது.

இத்தாலி, ஆஸ்திரியா, குரேஷியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பக்தர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு இந்த ஆண்டின் மகா கும்பமேளாவின் பல தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பில் பலர் தங்கள் பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். ஒரு இத்தாலிய பக்தர் தனது அனுபவத்தைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார், "நான் சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு புனித நீராடலை மேற்கொண்டேன், இது வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு போல் உணர்கிறேன். 144 ஆண்டுகளாக மக்கள் இந்தத் தருணத்திற்காக காத்திருக்கிறார்கள், அதற்கு சாட்சியாக இருப்பதற்கு நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் ".
இந்திய விருந்தோம்பலின் அரவணைப்பால் மூழ்கிய சர்வதேச பக்தர்கள், இந்த அனுபவத்தில் தங்களை மூழ்கடித்தனர். குரோஷியாவிலிருந்து வருகை தந்த ஆண்ட்ரோ, "இது உண்மையிலேயே ஓர் அற்புதமான அனுபவம். மகா கும்பமேளாவின் சூழல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இங்குள்ள ஏற்பாடுகளும் வசதிகளும் மிகச்சிறந்தவை " என்று கூறினார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த மற்றொரு பக்தரான அவிகெல்லுக்கு, தனது உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "இது நம்பமுடியாதது மற்றும் அசாதாரணமானது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம்! இதன் மூலம், இந்தியாவின் ஆன்மாவை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன்" என்று கூறினார்.
மகா கும்பமேளா 2025-ன் மிகவும் வசீகரிக்கும் காட்சிகளில் ஒன்று, அமிர்த நீராடலின் போது கவனத்தின் மையமாக மாறிய துறவிகள் நாகா சாதுக்கள் முன்னிலையில் இருந்தனர். மேலும், வசந்த பஞ்சமியின் போது அமிர்த நீராடலுக்கான ஊர்வலமான ஷோபா யாத்திரை காட்சி மகிழ்ச்சியாக இருந்தது. சில நாகா சாதுக்கள் கம்பீரமான குதிரைகளில் சவாரி செய்தனர். மற்றவர்கள் தங்கள் தனித்துவமான ஆடை மற்றும் புனித ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வெறுங்காலுடன் நடந்து சென்றனர். மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் முடியும் அவர்களின் திரிசூலங்களும் உயரமாக இருந்தன. இது மகா கும்பமேளாவின் புனிதத்தை மேலும் அதிகரித்தது. அவர்களின் கடுமையான மற்றும் சுதந்திரமான இயல்பு இருந்தபோதும், தங்கள் அகாரா தலைவர்களின் உத்தரவுகளை மகத்தான ஒழுக்கத்துடன் அவர்கள் பின்பற்றினர். இது பன்முகத்தன்மைக்குள் ஒற்றுமையைக் குறிக்கிறது. அவர்களின் துடிப்பான ஆற்றலும் பக்தியும் அனைவரையும் தொற்றிக் கொண்டது.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் சனாதன கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த சமத்துவம் மற்றும் நல்லிணக்க மாண்புகளின் உண்மையான அடையாளமாக இது உள்ளது. சங்கமத்தில் உள்ள புனித இடம் அனைவரையும் வரவேற்றது-அவர்களின் மொழி, பிராந்தியம், பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து சமூக மற்றும் பொருளாதார தடைகளையும் உடைத்து, பக்தர்கள் ஒன்றாக உணவு உண்ணவும், அருகருகே உட்கார்ந்து சாப்பிடவும் அமைக்கப்பட்ட ஏராளமான உணவு மையங்களிலும் (அன்னக்ஷேத்திரங்கள்) இந்த ஒற்றுமை உணர்வு பிரதிபலித்தது.

மகா கும்பமேளா என்பது ஒரு திருவிழா மட்டுமல்ல; இது இந்தியாவின் ஆன்மீக மரபுகளுடன் கோடிக்கணக்கான மக்களை இணைக்கும் ஒரு உடைக்கப்படாத நூல். சங்கமத்தின் கரையில், பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த துறவிகள்-சைவ, சக்தி, வைஷ்ணவ, உடாசி, நாத், கபீர் பாந்தி, ரைடாஸ் மற்றும் பலர்-ஒன்றுகூடி தங்களின் தனித்துவமான சடங்குகளை பக்திப் பெருக்குடன் நிகழ்த்தினர். மகா கும்பமேளாவின் செய்தி, துறவிகளால் தெரிவிக்கப்பட்டபடி, தெளிவாக இருந்தது. ஆன்மீகம் சாதி, மதம் மற்றும் புவியியலின் அனைத்து எல்லைகளையும் மீறுகிறது.

மகா கும்பமேளா 2025 தொடர்ந்து வெளிவரும்போது, அது ஒரு மதக் கூட்டத்தை விட அதிகமாகிறது. இது மனித ஒற்றுமை, இயற்கை மற்றும் தெய்வீகத்தின் துடிப்பான கொண்டாட்டமாகும். இது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் அனுபவிக்கப்படுகிறது. ஏற்கனவே 35 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று, வரும் நாட்களில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், மகா கும்பமேளா ஆன்மீக மற்றும் கலாச்சார ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து பிரகாசித்து வருகிறது.
***
SMB/PKV/LDN/PD
(Features ID: 158170)
आगंतुक पटल : 13
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English