• Sitemap
  • Advance Search
Others

இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: பெண்கள் பங்களிப்பின் எழுச்சி

Posted On: 18 NOV 2024 1:17PM

அதிக எண்ணிக்கையிலான பெண்கள், இந்தியாவின் தொழிலாளர் சக்தியாக இணையும் போது, வாய்ப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய புரட்சிகர பொருளாதார மாற்றத்தை நாடு எதிர்கொண்டுள்ளது. தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி அல்லது உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும், பெண்கள் பல்வேறு பொறுப்புக்களை ஏற்கும் போது, அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து, பணியிடச் சூழலை மேம்படுத்தும் புதிய யோசனைகள், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்புணர்வை உருவாக்குகின்றனர்.

இந்தியத் தொழிலாளர் சக்தியில், பெண்களின் பங்களிப்பைத் தடுத்து நிறுத்த முடியாத அளவில் ஏற்பட்டுள்ள எழுச்சி

2017-18 மற்றும் 2023-24-ம் ஆண்டுகளுக்கு இடையே, இந்தியாவில், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் மற்றும் பணிகள் சார்ந்த பங்களிப்பு விகிதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த மாற்றம், பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமின்றி, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பதையும், சமத்துவம், எழுச்சி மிக்க தொழிலாளர் சந்தையை உருவாக்குவதற்கான இந்தியாவின் செயல்பாடுகளையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

 

 

 

 

பெண் தொழிலாளர்களுக்கான அளவீடுகள் (2017-18 மற்றும் 2023-24)

அளவீடு

2017-18               

2023-24

வேலைவாய்ப்பு விகிதம் (WPR) (%)     

22.0%                   

40.3%

 

தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் (LFPR) (%)    

23.3%       

41.7%

 

வேலைவாய்ப்பின்மை விகிதம் (%)      

5.6%                     

3.2%

 

பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம், ஏறத்தாழ இருமடங்காக உயர்ந்துள்ளது. இது, பல்வேறு துறைகளில் பெண் தொழிலாளர்கள் பெருமளவில் சேர்ந்துள்ளதைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த மாற்றம், பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதத்தில் காணப்படும் இதே போன்ற உயர்வு இருப்பதைக் காண முடிகிறது. இது, வேலைவாய்ப்பைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மேலும், பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சரிவு, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதைக் குறிக்கிறது. பெண்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, அவர்களிடையே மேம்பட்ட வேலைவாய்ப்பு பெறுவதற்கான செயல்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் பணியின் மீதான திருப்தி ஆகிய இரண்டு அம்சங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் - 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில், பணியில் இருப்பவர்கள் அல்லது தீவிரமாக வேலைவாய்ப்பைத் தேடுபவர்களின் சதவீதம். இந்த அளவீடு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில், பெண்களின் பங்களிப்பு குறித்த கண்ணோட்டத்தை வழங்குகிறது.

வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் - பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மொத்த மக்கள் தொகையின் சதவீதம். இது, பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில், முழுநேரம் அல்லது பகுதிநேரத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் அனைத்து நபர்களையும் உள்ளடக்கியது. பணிப் பங்கேற்பு விகிதம் என்பது, தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த முக்கியக் குறியீடாகும். மேலும், இது வெவ்வேறு தொழிலாளர் குழுக்களிடையே உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளின் அளவை மதிப்பிடப் பயன்படுகிறது.

வேலைவாய்ப்பின்மை விகிதம் - வேலைவாய்ப்பு பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ,பணிக்குச் செல்லத் தயாராக இருப்பவர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தேடுபவர்களின் சதவீதம். இந்த அளவீடு, தொழிலாளர் சந்தை மற்றும் பொருளாதாரத்தை மதிப்பீடு செய்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்பில்லாத நபர்களின் எண்ணிக்கையை, மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் வகுத்து 100 ஆல் பெருக்குவதன் மூலம், வேலையின்மை விகிதம் கணக்கிடப்படுகிறது.

மாற்றத்திற்கான காரணி எது?

கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள், மற்றும் தொழிலாளர் எண்ணிக்கை சார்ந்த தரவுகளில் மேம்பட்ட அளவீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகளால், பெண் தொழிலாளர் பங்கேற்பில், மாற்றத்திற்கான உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான மிக முக்கிய உந்து சக்திகளில் ஒன்றாக கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும். இது பெண் தொழிலாளர்களின்  பங்கேற்பு விகிதத்தில் 'யு' வடிவ செயல்பாடுகளை உருவாக்கியுள்ளது. பெண்கள் கல்வியைத் தொடரும்போது, தொழிலாளர் தொகுப்பில் அவர்களின் பங்கேற்பு இந்த 'U' வடிவ வளைவைப் பிரதிபலிக்கிறது. குறைந்த கல்வித் தகுதி கொண்ட பெண்கள் பெரும்பாலும், தேவையின் காரணமாக, முறைசாரா அல்லது குறைந்த ஊதியம் கிடைக்கும் துறைகளில் உள்ள பணிகளை மேற்கொண்டு, தொழிலாளர் சார்ந்த தொகுப்பில் உள்ளனர். இதற்கு நேர்மாறாக, உயர் பட்டங்கள் பெற்ற பெண்கள், தொழில்முறைப் பணிகளைப் பெறுகின்றனர். இதன் விளைவாக, குறைந்த மற்றும் உயர் கல்வித் தகுதி ஆகிய இரண்டு நிலைகளிலும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த வளைவு, இடைநிலைக் கல்வியில் (இடைநிலைக் கல்வி) தொழிலாளர் பங்கேற்பில் சரிவையும், ஆனால் பெண்கள் உயர் தகுதிகளைப் பெறும்போது ஏற்படும் உயர்வையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த முறை, பெண்கள் சரியான பணிகளில் சேர்வதற்கும், பெரும்பாலும் சிறந்த நிதிசார் நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பில் திருப்தி பெறுவதற்கும், உயர் கல்வியின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது..

எனவே, பெண்களுக்கான உயர்கல்வியில் முதலீடு செய்வது, பெண் தொழிலாளர் தொகுப்பின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வருவதற்கான உத்தி சார்ந்த அணுகுமுறையாக உருவாகிறது. கல்வித் தகுதியை ஊக்குவிப்பதன் மூலம், அதிக அளவிலான பெண்கள் பணியிடங்களில் வேலைவாய்ப்புப் பெறுவதுடன் மட்டுமின்றி, அவர்களின் திறன்களையும், ஆற்றல்களையும், முழுமையாகப் பயன்படுத்தும் பணிகளில், அவர்கள் சிறந்து விளங்குவதையும் உறுதி செய்ய முடியும்.

* இந்தியாவில் தொழிலாளர் சந்தைகள்: கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களின் அளவீடு1 சுர்ஜித் எஸ் பல்லா கரண் பாசின் தீர்த்ததன்மாய் தாஸ், முன்னாள் செயல் இயக்குநர், ஐஎம்எப் பல்கலைக்கழகம், அல்பானி ஐஐஎம், பெங்களூரு.

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் கட்டமைப்பு மாற்றங்கள், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதால், சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற வளர்ச்சித் துறைகள், பாரம்பரிய விவசாயத்திற்கு உத்வேகம் அளிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இத்துறைகள் குறிப்பாகப் பெண்களுக்கு மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளன. மேலும், முன்பு குறைவாக இருந்த பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், பெண்களின் வேலைவாய்ப்புக்கான களத்தை விரிவுபடுத்துகின்றன.

பொருளாதார மற்றும் சமூக மாற்றம்: இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள்

பணியாளர் சார்ந்த நடவடிக்கைகளில், பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பது, பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியாகத் திகழ்கிறது. அதிகரித்து வரும் பெண்களின் பங்கேற்பு, உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும், புதுமைகளைப் படைப்பதிலும், மற்றும் அதிக நிதி நிலைத்தன்மையை வளர்ப்பதிலும், நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதன் மூலம், இந்தியா உலக அரங்கில், வலிமையான மற்றும் மீள்திறன் கொண்ட பொருளாதார நாடாக நிலைநிறுத்திக் கொள்கிறது. பெண்களின் பொருளாதாரம் சார்ந்த பங்களிப்புகள், இந்தியாவின் பணியாளர்களுக்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி, பல்வேறு தொழில்துறைகளில் கண்ணோட்டங்களைப் பன்முகப்படுத்தவும் உதவுகின்றன. இது புதிய யோசனைகளையும், அணுகுமுறைகளையும் தூண்டுகிறது. இந்த மாற்றம் வெறும் எண்களைச் சார்ந்ததாக மட்டுமின்றி, இது உலக அளவிலான போட்டியை எதிர்கொள்ளவும், மாறிவரும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளவும், சிறந்த முறையில் தயாராக இருக்கும் ஒரு வலுவான பொருளாதார நடவடிக்கையைக் குறிக்கிறது.

அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, நாடு பாலின சமத்துவத்தில், சீரான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பெண்களின் அதிகரித்து வரும் நிதிச் சுதந்திரம், ஒரு தொடர் விளைவை உருவாக்குகிறது. இது குடும்பங்களையும், சமூகங்களையும் மேம்படுத்துவதுடன், அர்த்தமுள்ள சமூக மாற்றத்தையும் கொண்டு வருகிறது. பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு, நிதி ரீதியாகப் பங்களிக்கும் போது, அக்குடும்பங்கள் பெரும்பாலும் கல்வியில், அதிக முதலீடு செய்யவும், சிறந்த சுகாதார வசதிகளைப் பெறவும், புதிய வாய்ப்புகளை ஆராயவும் முடிகிறது. இந்த அதிகாரமளித்தல் நடவடிக்கை மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகும். நிதிசார் சுதந்திரம் பெற்றுள்ள பெண்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் முடிவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், நீடித்த நேர்மறையான தாக்கங்களை உருவாக்கத் தேவையான வளங்களும், செல்வாக்கும், பெண்களிடம் இருக்கும் போது, சமூகங்கள் அதிலிருந்து பயனடைகின்றன. அதிக சமத்துவமான பணியாளர் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்த மாற்றம் சமூகக் கட்டமைப்பைச் வலுப்படுத்துவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒரு அடித்தளம் அமைக்கிறது.

வரும் ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் எதிர்காலத் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பணியாளர் வர்க்கத்தில், பெண்களின் பங்கேற்பு இன்றியமையாததாக இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள, அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது அவசியமாகும். திறமையான தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும் போதும், வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை குறையும் போதும், உற்பத்தித் திறனைப் பராமரிக்கவும், எதிர்காலப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும், பாலினச் சமநிலை கொண்ட பணியாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தொழிலாளர் சந்தையில், அதிக எண்ணிக்கையிலான பெண்களை ஒருங்கிணைப்பதன் மூலம், தொழில்நுட்பம் முதல் சுகாதாரம் மற்றும் அதற்கு அப்பால் எனப் பல்வேறு தொழில்துறைகளை ஆதரிக்கத் தேவையான திறமையான வல்லுநர்களின் சீரான விநியோகத்தை இந்தியாவால் உறுதி செய்ய முடியும். இந்த அணுகுமுறை இந்தியாவின் மக்கள் தொகை சார்ந்த மாற்றங்களுக்கு, நாட்டைத் தயார்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் வலுப்படுத்துகிறது. இது போட்டி நிறைந்த உலகளாவிய சூழலில், இந்தியா  வளர்ச்சியடைய வழிவகுக்கிறது.

இந்தியப் பெண்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதைப் போலவே, நாடும் தனது மக்களின் ஆற்றல், லட்சியம் மற்றும் திறமையால் உந்தப்பட்டு உயர்ந்து நிற்கிறது. இது வெறும் பொருளாதார மாற்றம் மட்டுமின்றி, இது அனைவருக்கும் அதிகாரமளித்தல் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு புதிய சகாப்தத்தின் விடியலாகும்.

***

PKV/SV/KR

 

(Features ID: 158143) आगंतुक पटल : 19
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English