Technology
உலகமே காதியை அணியச் செய்வோம்
இந்திய பாரம்பரியமான காதியை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதற்கான போட்டியில் இணையுங்கள்
Posted On:
27 FEB 2025 4:37PM
உலகை கதர் அணியச் செய்தல் (மேக் தி வேர்ல்ட் வேர் காதி) எனப்படும் எனும் இயக்கமானது, இந்தியாவின் வளமான ஜவுளிப் பாரம்பரியத்தை உலகளாவிய ஆடை வடிவமைப்புப் போக்குகளுடன் இணைக்கிறது. இது விளம்பரத் துறை வல்லுநர்களுக்கும், ஆடை வடிவமைப்புக் கலைஞர்களுக்கும் ஒரு அற்புதமான போட்டியாகும். முதல் உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ்-ன் (WAVES) ஒரு பகுதியாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது புதுமையான விளம்பரங்கள் மூலம் காதியை ஒரு விரும்பத்தக்க உலகளாவிய பொருளாக நிலைநிறுத்த முயல்கிறது. இந்திய விளம்பர முகவர் சங்கம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டியானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து பங்கேற்பாளர்களை டிஜிட்டல், அச்சு, வீடியோ மற்றும் அனுபவ வடிவங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை உருவாக்க அழைக்கிறது. வியூக சிந்தனை மற்றும் படைப்பாற்றலில் கவனம் செலுத்தி, 'மேக் தி வேர்ல்ட் வேர் காதி' இயக்கமானது காதியின் பிராண்ட் பிம்பத்தை மேம்படுத்தவும், நுகர்வோரை ஈடுபடுத்தவும், உலக அளவில் அதன் காலத்தால் அழியாத சிறப்பைக் கொண்டாடவும் புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கிறது.

2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் மற்றும் ஜியோ வேர்ல்ட் கார்டன்ஸில் நடைபெறவுள்ள வேவ்ஸ் உச்சி மாநாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (M&E) துறையில் ஒரு மைல்கல் நிகழ்வாக அமையும். அதன் தனித்துவமான ஹப்-அண்ட்-ஸ்போக் மாதிரியின் மூலம், இந்த மாநாடு இந்தியத் திறமையாளர்களை, அதன் முக்கியத் தூண்களான ஒளிபரப்பு மற்றும் தகவல் பொழுதுபோக்கு, ஏவிஜிசி-எக்ஸ்ஆர் (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி), டிஜிட்டல் மீடியா, புத்தாக்கம், திரைப்படங்கள் ஆகியவற்றில் உலகளாவிய தொழில் துறை வல்லுநர்களுடன் இணைக்கும். ஒளிபரப்பு மற்றும் தகவல் பொழுதுபோக்கு பிரிவின் ஒரு பகுதியான 'மேக் தி வேர்ல்ட் வேர் காதி' போட்டி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பிராண்ட் உத்திகளை வடிவமைக்கும் வகையில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் வல்லுநர்களை ஒன்றிணைக்கிறது. இந்த சவால், வேவ்ஸ்-ன் ஒரு முன்னோடி முயற்சியான ‘இந்தியாவில் உருவாக்குவோம் (Create in India)' என்பதன் ஒரு பகுதியாகும். இந்தப் போட்டி, ஏற்கெனவே உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளிடமிருந்து 73,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை ஈர்த்துள்ளது. 2025 பிப்ரவரி 15-ம் தேதி நிலவரப்படி, காதி போட்டிக்காக 112 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில், காதியைப் போற்றி, உலக அரங்கில் இந்தியாவின் படைப்பாற்றல் திறனை எடுத்துக்காட்டும் ஒரு படைப்பாற்றல் போட்டிக்கான களம் தயாராகியுள்ளது.
பிரச்சாரத்திற்கு தேவைப்படுவன

நிகழ்ச்சி காலாண்டர்

பரிசுகள் மற்றும் அங்கீகாரம்

வேவஸ்-ன் ஒரு பகுதியாக நடைபெறும் 'உலகை காதி அணியச் செய்யும்' இயக்கமானது, விளம்பரத் துறை வல்லுநர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தங்களின் படைப்பாற்றலையும் வியூகத் திறமையையும் வெளிப்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. முதல் உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (WAVES) ஒரு பகுதியாக நடைபெறும், இந்த முன்னெடுப்பானது, இந்தியாவின் படைப்பாற்றல் களத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பரந்த அம்சத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். காதியை ஒரு உலகளாவிய மற்றும் உயர்வான பிராண்டாக நிலைநிறுத்துவதன் மூலம், இந்த இயக்கமானது இந்தியாவின் வளமான ஜவுளிப் பாரம்பரியத்தைக் கௌரவிப்பது மட்டுமல்லாமல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புதுமையான சிந்தனையையும் வளர்க்கிறது. மதிப்புமிக்க வேவ்ஸ் 2025 நிகழ்வானது, முன்னணி கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரிடம் யோசனைகளை முன்வைக்க ஒரு தளத்தை வழங்குவதால், பங்கேற்பாளர்கள் விலைமதிப்பற்ற அனுபவங்களைப் பெற முடியும். அத்துடன் காதியை முன்னிறுத்தி, உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிக்கலாம்.
***
PD/PLM
(Features ID: 158105)
आगंतुक पटल : 11
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English