Economy
யுபிஐ: உலகமயமாகும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி
இந்தியாவின் அமைதியான டிஜிட்டல்மயமாக்கல் நடவடிக்கைகள், புத்தாக்கத்தின் சர்வதேச அடையாளமாக உருவெடுக்கிறது
Posted On:
17 SEP 2025 3:46PM
தில்லி நகரத்தின் சாலையோரத்தில், திண்பண்டங்களை விற்பனை செய்து வரும், சாலையோர வியாபாரி, வைத்திருக்கும் ஒரு சிறிய ஒலிப்பெட்டியில் இருந்து வெளிப்படும் ஒரு குரல், பணம் பெறப்பட்ட சில விநாடிகளில், அவரது வங்கிக் கணக்கில் இருபது ரூபாய் வரவு வைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறது. ரொக்கப் பரிமாற்றமோ, சில்லறைக்காகத் தடுமாறும் நிலை ஏற்படவில்லை. வாடிக்கையாளர், தனது மொபைல் தொடுதிரை வாயிலாக மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை, வியாபாரிக்கு, தனது பொருட்களுக்கான விலை, தனது வங்கிக் கணக்கிற்கு சென்றடைந்து விட்டதை உறுதி செய்கிறது. இந்தக் காட்சி, இந்தியாவில் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டதால், அவை எவரையும் வியப்படையச் செய்வதில்லை. உலகெங்கிலும், சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) பொருளாதார வல்லுநர்கள் உட்பட, துறைசார்ந்த நிபுணர்கள், யுபிஐ-யின் வெற்றிகரமான பணப் பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

2025 ஜூன் மாதத்தில், சர்வதேச செலாவணி நிதியம் “வளர்ந்து வரும் டிஜிட்டல் அடிப்படையிலான சில்லறை வர்த்தகப் பணப் பரிவர்த்தனைகள்: செயல்பாடு குறித்த மதிப்பாய்வு” என்ற தலைப்பில் ஒரு நிதி நுட்பக் குறிப் நிதிசார் தொழில்நுட்பம் சார்ந்த விபரங்களை வெளியிட்டது. அதன் குறிப்புகளில், ஒரு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் இருந்தது: 2016-ம் ஆண்டில், தொடங்கப்பட்ட உடனடிப் பணப்பரிவர்த்தனை அமைப்பான இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ), நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மாற்றியமைத்துள்ளதுடன், உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இது குறித்த ஐஎம்எப் அமைப்பின் பாராட்டுதல்கள், அதன் 'ஃபைனான்ஸ் & டெவலப்மென்ட்' இதழின் செப்டம்பர்-2025 பதிப்பில், "இந்தியாவின் தடையற்ற பணப்பரிவர்த்தனைகள்" என்ற தலைப்பில், ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது வரை இருந்தது. யுபிஐ எவ்வாறு "இந்தியாவின் பணப்பரிவர்த்தனை அமைப்பை மாற்றியமைத்து, மாதந்தோறும் 19 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, அதன் எண்ணிக்கை அடிப்படையில், உலகின் மிகப்பெரிய நிகழ்நேரப் பணப்பரிவர்த்தனை அமைப்பாக உருவெடுத்துள்ளது" என்பதை அந்தக் கட்டுரை விவரித்தது. இந்தச் செயல்பாடு, எவ்வாறு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்க முடியும், பணப்பரிவர்த்தனையிலிருந்து விலகிச் செல்லும் மாற்றத்தை விரைவுபடுத்த முடியும், நிதித் துறை முழுவதும் புதுமைகளை வளர்க்க முடியும் என்பதை இந்தியாவின் டிஜிட்டல் நடைமுறைகள் எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பெருமளவிலான வர்த்தக நடவடிக்கைகள், பணப் பரிவர்த்தனைகளையே நம்பியிருந்த ஒரு நாட்டிற்கு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்தியதில், இந்தியாவின் வெற்றிக்கு, ஐஎம்எப் கட்டுரைகள் சான்றாக உள்ளன.
ஒரு டிஜிட்டல் புரட்சியின் உருவாக்கம்
நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியா, பாரம்பரிய வங்கி முறையைக் கடந்து, நேரடியாக டிஜிட்டல் யுகத்திற்குள் எப்படி நுழைய முடியும்? இதற்கான விடை, பிற்காலத்தில், கொள்கை வகுப்பாளர்களால் “டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு” என்று அழைக்கப்பட்ட மூன்று சீர்திருத்தங்களின் தொகுப்பில் அடங்கியிருந்தது.
* கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கான ஜன் தன் திட்டம்.
* ஒவ்வொரு குடிமகனுக்கும் பயோமெட்ரிக் அடையாளத்தை வழங்கிய ஆதார்.
* இணையதள வசதியை மக்களிடம் கொண்டு சேர்த்த, புரட்சிகர தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியால் உந்தப்பட்ட குறைந்த விலையிலான மொபைல் தரவுகள்.
2016-ம் ஆண்டில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) நிறுவனம் யுபிஐ என்ற செயலியை அறிமுகப்படுத்திய போது, அது இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளின் அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. யுபிஐ செயலை ஒன்றோடொன்று இணக்கமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, எந்தவொரு செயலியைப் பயன்படுத்துபவர்கள், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு, நிகழ்நேரத்தில் நேரடியாகப் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது. இந்த வடிவமைப்பு எளிதாக பயன்படுத்தும் வகையில் புரட்சிகரமானதாக இருந்தது. பயனாளிகள் தங்களுக்குத் தேவையான கையிருப்பை முன்கூட்டியே நிரப்பிக் கொள்ள வேண்டிய நிலை அல்லது வர்த்தகர்கள் எந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.
சர்வதேச செலாவணி நிதியத்தின் அறிக்கை, இந்த புதுமையான செயல்முறையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பிற செயலிகளுடன் இணக்கமாகச் செயல்படும் தன்மை, ஏகபோகமாக இயக்கப்படும் அமைப்புகளின் குறைபாடுகளை தவிர்ப்பதை யுபிஐ உறுதி செய்கிறது. மாறாக, யுபிஐ செயலி "பயனர்கள் தங்களுக்கு விருப்பமான செயலியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அதிகரிக்க உதவியுள்ளது". மேலும், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தவும், புதுமைகளைப் புகுத்தவும் ஊக்குவித்தது. சுருக்கமாக, வங்கிகள், நிதிநுட்ப நிறுவனங்கள் மற்றும் பெரிய அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரே பாதையில் தங்களை இணைத்துக் கொள்ளக்கூடிய சமமான தளத்தை யுபிஐ உருவாக்கியுள்ளது.
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு தருணம்
ரூ.20 விலையிலான தேநீர் பரிவர்த்தனைகளிலிருந்து, டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் வரை, யுபிஐ உலகளவில் பாராட்டுப் பெற்றுள்ளது.
யுபிஐ செயலியின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள அளவு வியக்க வைக்கும் அளவில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2025-ம் ஆண்டில், இந்த அமைப்பு ரூ 24.85 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான 2,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. இந்த வளர்ச்சிப் பாதையை மேலும் வலுப்படுத்தும் வகையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன், தனிநபர்-வர்த்தகர்கள் இடையேயான பரிவர்த்தனைகளை யுபிஐ செயலி வாயிலாக மேற்கொள்வதற்கான உச்ச வரம்பைத் திருத்தியமைத்துள்ளது. 2025 செப்டம்பர் 15 முதல், பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட, சரிபார்க்கப்பட்ட பிரிவுகளுக்கு, நாளொன்றுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம், அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குப் பரவலாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும், 85 சதவீதம் யுபிஐசெயலி வாயிலாக நடைபெறுகிறது. இனி வெறும் நிதிசார் புள்ளிவிவரமாக மட்டுமின்றி, சிறு நகரங்களில் உள்ள காய்கறி விற்பனையாளர்கள் முதல் கிராமப்புற சந்தைகளில் உள்ள பெண் தொழில்முனைவோர் வரை, சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில், யுபிஐ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை இது பிரதிபலிப்பதாக உள்ளது.
யுபிஐ என்பது வசதிக்கான ஒரு கருவியாக மட்டுமின்றி, அது அதிகாரமளிக்கும் சாதனமாகும் என்ற கருத்து நாடு முழுவதிலும் இந்தியா முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருவதாக ஐஎம்எஃப் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. தில்லியில் உள்ள தேநீர் விற்பனையாளர், தனது டிஜிட்டல் வருமானத்தை ரொக்கப் பணத்தைப் போலவே உள்ளது என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளார். பாட்னாவில் உள்ள ஒரு வீட்டுப் பணியாளர், வரிசையில் நிற்காமல் உடனடியாக வீட்டிற்குப் பணம் அனுப்ப முடியும் என்றார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு விவசாயி, இடைத்தரகர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, தனது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் பெற வகை செய்கிறது. இது மத்திய அரசின் பெருமைக்குரிய அம்சமாகும். இந்தியாவில் 89%-க்கும் அதிகமானோர், தற்போது வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளனர். அவர்களில் பலர், ஆதார் மற்றும் ஜன் தன் திட்டம் மூலம் வங்கிக் கணக்குகளைப் பெற்றுள்ளனர். மேலும், யுபிஐ அவர்களை டிஜிட்டல் பொருளாதாரத்துடன் இணைக்கும் பாலமாக மாறியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
* யுபிஐ மாதந்தோறும் 2,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது.
• இந்தியாவில், கடன் மற்றும் பற்று அட்டைகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளைக் காட்டிலும், அதிகப் பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.
• தற்போது, இந்த செயலி உலகின் மிகப்பெரிய விரைவான சில்லறை பரிவர்த்தனை அமைப்பாக உள்ளது.
• யுபிஐ தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளுக்கு நாளொன்றுக்கு ரூ 10 லட்சம் வரை, வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது.
உலக அரங்கில் அடியெடுத்து வைக்கும் யுபிஐ
தில்லியின் தெருக்களிலிருந்து, ஈஃபிள் கோபுரம் வரை, இந்தியாவின் பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறைகள் சர்வதேச அளவில் விரிவடைந்து வருகின்றன.
இந்தியாவில், புதுமைக் கண்டுபிடிப்பாகத் தொடங்கிய இது, தற்போது, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், நாட்டின் எல்லைகளைக் கடந்து செல்கிறது. சிங்கப்பூரில், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை உடனடியாக மேற்கொள்ளவதற்கான நடவடிகைகளைச் சாத்தியமாக்க, யுபிஐ பேநவ் என்று செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ் போன்ற நாடுகளில், இந்தியப் பயணிகள்,யுபிஐ செயலியைப் பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியும். பிரான்சில், இந்திய சுற்றுலாப் பயணிகள், தற்போது,ஈஃபிள் கோபுரத்தில், கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, இந்திய ரூபாயில் இதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம். நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில், ஏற்கனவே பணப் பரிவர்த்தனைகளுக்காக, யுபிஐ செயலியை ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன், இந்த செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒரு அமைதியான மற்றும் வலுவான மாற்றம் ஆகும். பல்வேறு தசாப்தங்களாக, உலகளவிலான நிதி என்பது, மேற்கத்திய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான அட்டைகள் போன்ற கட்டமைப்புகளால் வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொது டிஜிட்டல் தளம், ஏற்றுமதி செய்வதற்கான பொருளாகக் காட்சிப்படுத்தப் படுகிறது. யுபிஐ செயலி எல்லைகளைக் கடந்து, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவிடுவது மட்டுமின்றி, அது புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதன் விரிவான செயல்பாடு ஆகியவற்றிற்கான இந்தியா மீதான நன்மதிப்பையும் கொண்டு செல்கிறது.
நாடுகளுக்கான முன்மாதிரி
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரியாக, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அமைந்துள்ளது என்பதை ஐஎம்எப் எடுத்துக்காட்டுகிறது.
யுபிஐ செயலிக்குப் பாராட்டு தெரிவித்துள்ள ஐஎம்எப், அதன் பின்னணியில் உள்ள கட்டமைப்பையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு என்று இந்தியா அழைக்கிறது. யுபிஐ செயலி தனித்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக, ஒவ்வொரு இந்தியருக்கும், தனித்துவ அடையாளத்தை வழங்கிய ஆதார் மற்றும் கோடிக்கணக்கான மக்கள், வங்கிக் கணக்குகள் தொடங்குவதை உறுதிசெய்த ஜன் தன் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சியடைந்துள்ளது. இவற்றுடன், உலகின் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் மொபைல் தரவுகளும் இணையும் போது, யுபிஐ செயலியின் பயன்பாடு அதிகரிப்பதற்கான களம் அமைந்தது.
அடையாளம், கணக்குகள், இணைப்பு, பணம் செலுத்துதல் என இந்த அடுக்கில் அமைந்த அணுகுமுறைதான், இந்திய முன்மாதிரியை, பிற நாடுகளை வெகுவாக ஈர்ப்பதாக அமைந்தது. ரொக்கப் பணத்தைச் சார்ந்த சிக்கலில் தவிக்கும் நாடுகள், அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்குதல், வெளிப்படையான கட்டண நடைமுறைகளை உருவாக்குதல், பின்னர் தனியார் நிறுவனங்கள் இதற்கான புதுமைகளைக் கொண்டுவர அனுமதித்தல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று ஐஎம்எப் குறிப்பிடுகிறது. இதன் முக்கிய அம்சம், ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் தன்மைதான் என்று அது வலியுறுத்துகிறது. இந்த அமைப்பை வெளிப்படைத் தன்மை கொண்டதாக வைத்திருப்பதன் மூலம், செயலிகள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான போட்டித் தன்மையை இந்தியா உறுதிசெய்தது. இது சேவையின் தரத்தை மேம்படுத்தி, பயனர்களின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது.
உள்ளூர் பயன்பாட்டிலிருந்து உலக அளவிலான அங்கீகாரம் வரை:
இந்தியாவின் அமைதியான டிஜிட்டல் புரட்சி, புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான உலகின் அடையாளமாக உருவெடுக்கிறது. பணப் பரிவார்த்தைக்கான குரலை ஒலிப்பெட்டியில் கேட்கும் தில்லியில் உள்ள சாலையோர வியாபாரிக்கு, யுபிஐ செயலி பல்வேறு நாடுகளிலிருந்தும், ஐஎம்எஃப் போன்ற செலாவணி நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுள்ள அங்கீகாரம் குறித்து அறிந்திராமல் இருக்கலாம். ஆனால், அவரது அன்றாட அனுபவம் விரைவான, பாதுகாப்பான மற்றும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள்தான், உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. அவரிடமும், அவரைப் போன்ற கோடிக்கணக்கான வர்த்தகர்களிடமும், இந்தியா எவ்வாறு நம்பிக்கையை டிஜிட்டல் மயமாக்கியது என்ற கதை அடங்கியுள்ளது.
இன்று யுபிஐ செயலி என்பது, பணபரிவர்த்தனைக்கான இடைமுகம் என்பதைவிட மேலானது. அது இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்பின் முகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மேலும் தற்போது, ரொக்கப் பரிவர்த்தனையிலிருந்து டிஜிட்டல் நடைமுறைக்கு மாற விரும்பும் நாடுகளுக்கு, ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. யுபிஐ செயலி, இந்தியாவின் வெற்றிக் கதையாக மட்டுமின்றி, வாய்ப்புக்களுக்கான உலகின் அடையாளமாகவும் மாறியுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் நடவடிக்கைகள், நாட்டை உலக அரங்கிற்கு அழைத்துச் செல்கின்றன. இதை உலக நாடுகளும் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
****
SV/PLM/KR
(Features ID: 158086)
आगंतुक पटल : 15
Provide suggestions / comments