• Sitemap
  • Advance Search
Social Welfare

குடியரசுக்கான இந்தியாவின் பயணம்

Posted On: 25 JAN 2026 9:43AM

குடியரசு தினம்: இந்தியக் குடியரசின் உருவாக்கம்

          இந்தியாவின் பயணத்தில் குடியரசு தினம் ஒரு மைல்கல்லாக திகழ்கிறது.  ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கும் ந்நாளில்தான் இந்தியா,  'இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக' நிறுவப்பட்டது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைந்து காலனியாதிக்க ஆட்சி முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனவரி 26, 1950 அன்றுதான் மக்களின் விருப்பப்படியும், சட்டப்படியும் இந்தியா தன்னாட்சி நாடாக உருவெடுத்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த இத்தருணம்,  ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளையும் தேசத்தின் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் வகையிலான கொண்டாட்டங்களின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூப்படுகிறது. குடியரசு தினக் கொண்டாட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் இலட்சியங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்கின்றன; இது புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும் விழாக்கொண்டாட்டங்கள், அணிவகுப்பு ஆகியவற்றில் மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது. இந்த அணிவகுப்பு, இராணுவ ஒழுங்கு, கலாச்சார பாரம்பரியம், பிராந்தியங்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த காட்சியை நமக்கு வழங்குகிறது; மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் இந்நாளில், நாடு முழுவதும், மாநிலத் தலைநகரங்கள், மாவட்டங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்களில் கொடியேற்றும் விழாக்களுக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள், குடியரசு தினத்தை மக்கள் பங்கேற்கும் நிகழ்வாக மாற்றி, அரசியலமைப்பு வலியுறுத்தும் விழுமியங்களையும் கொள்கைகளையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன.

77-வது குடியரசு தினம்: வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள்

இந்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்களில், “வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருப்பொருள் குடியரசு தின அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகள், பொதுமக்களுக்கான பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அனைத்து அம்சங்களிலும் எதிரொலிக்கிறது. இதன் வாயிலாக, இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்களில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை மையமாகக் கொண்டு, சுதந்திரம், கலாச்சார வெளிப்பாடு, தேசத்தின் லட்சியங்கள் ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன.

2026 குடியரசு தின அணிவகுப்பு, தேசிய அளவில் பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய ஒரு பெரிய அளவிலான கலாச்சார நிகழ்வாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளுடனான இந்தியாவின் உறவைப் பிரதிபலிக்கும் வகையில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும்  இவ்வாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த ஆண்டு அணிவகுப்பில், பாரம்பரிய அணிவகுப்புக் குழுக்களும் அரசின் சேவைகளை விளக்கும் விதமான அணிவகுப்புகளும் இடம்பெறுகின்றன; இந்திய ராணுவத்தின் போர் அணிவகுப்பு முறையும் முதல் முறையாக காட்சிபடுத்தப்பட உள்ளது.

2026 குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய நிகழ்வுகளில் பின்வருவன அடங்கும்:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்களின் மொத்தம் 30 அலங்கார ஊர்திகள், 'சுதந்திரத்தின் மந்திரம் – வந்தே மாதரம்'; 'செழிப்பிற்கான மந்திரம் – தற்சார்பு இந்தியா' ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. கடமை பாதையில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில் சுமார் 2,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மேலும், விவசாயிகள், கைவினைகலைஞர்கள், விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், பெண் தொழில்முனைவோர், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசின் முக்கிய திட்டங்களின் பயனாளிகள், முன்களப் பணியாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மக்களை மையப்படுத்திய பல முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. MyGov, MY Bharat போன்ற தளங்கள், பொதுமக்களை—குறிப்பாக இளைஞர்களையும், படைப்பாற்றல் திறன் மிக்கவர்களையும் குடியரசு தினக் கருப்பொருளுடன் இணைக்கும் வகையில், தேசிய அளவில் பல்வேறு போட்டிகளுக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அவற்றில்

  • சுதந்திரத்தின் மந்திரம் – வந்தே மாதரம்என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி;
  • ‘செழிப்பிற்கான மந்திரம் – தற்சார்பு இந்தியாஎன்ற தலைப்பில் ஓவியப் போட்டி;
  • வந்தே மாதரம்  பாட்டுப் போட்டிகள்;
  • வந்தே மாதரத்தின் பரிணாம வளர்ச்சி; விண்வெளி மற்றும் விளையாட்டு துறைகளில் இந்தியாவின் சாதனைகள், தேசிய வளர்ச்சித் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் வினாடி வினாப் போட்டிகள் ஆகியன அடங்கும்.

இப்போட்டிகளில் பதிவு செய்வதும் பிற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் பிரத்யேக MY Bharat தளத்தில் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இது, தேசிய அளவிலான குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.

ட்டுமொத்தமாக, 77-வது குடியரசு தினமானது கருப்பொருள் அடிப்படையிலான அணிவகுப்பு; பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதமான நாடு தழுவிய அளவிலான முன்முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் பாரம்பரியத்தை பொதுமக்களுடன் இணைக்கும் ஒரு கொண்டாட்டமாக திகழ்கிறது. மேலும், பொதுமக்கள் பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் இந்நிகழ்வில் இணைவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

ஜனவரி 26: பூரண சுயராஜ்ஜியத்திலிருந்து அரசியலமைப்புச் சட்டம் வரை:

ஜனவரி 26-ஐ குடியரசு தினமாக ஏற்றுக்கொண்டது, இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை அதன் சுதந்திரப் போராட்டத்தின் மைல்கற்களுடன் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவாகும்.  இருபது ஆண்டுகளுக்கும் மேலா ஏற்பட்ட முன்னேற்றத்தின் தெளிவான அடையாளமாக இந்தத் தேதி விளங்குகிறது. 1930-ல் முழுமையான சுதந்திரத்தை வலியுறுத்தியதில் தொடங்கிய இந்த முன்னேற்றப்பாதை, 1950-ல் சுயராஜ்ஜியத்திற்கான அரசியலமைப்பு முறையை ஏற்றுக்கொண்டது வரை நீள்கிறது. குடியரசு தினத்தைப் புரிந்துகொள்வதற்கு, இந்தப் பயணத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனெனில், அரசியல் லட்சியம் படிப்படியாக ஒரு நீடித்த, அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலான ஒழுங்காக மாற்றியமைக்கப்பட்டது இதன் மூலம் வெளிப்படுகிறது.

சுதந்திரத்திலிருந்து குடியரசு வரை இந்தியாவின் பயணம்

  • 26 ஜனவரி 1930: பூரண சுயராஜ்ஜியத்திற்கான அழைப்பு

சுதந்திர போராட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, பூரண சுயராஜ்ஜியத்திற்கான (முழு சுதந்திரம்) கோரிக்கை 1929-ல் முறையான அரசியல் இலக்காக மாற்றமடைந்தது. 1930-ம் ஆண்டு     ஜனவரி 26-ம் தேதி, நாடு முழுவதும் பூரண சுயராஜ்ஜிய தினத்தைக் கடைப்பிடித்து, முழுமையான தன்னாட்சி என்ற இலக்கிற்கு இந்தியர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். மேலும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது என்ற முடிவை   நிராகரித்தனர். நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பிரகடனம் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது; காலனித்துவ ஆட்சியின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு தெளிவான அரசியல் இலக்கை இது முன்வைத்தது.

 

  • 9 டிசம்பர் 1946: அரசியலமைப்பு நிர்ணய சபையின் பணிகள் தொடங்கியது.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி, தற்போதைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபமாக உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் முதன்முறையாகக் கூடியது, இந்திய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளின் முறையான தொடக்கத்தைக் குறித்தது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பொறுப்புவாய்ந்த இந்தச் சபை, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணியை நிறைவு செய்ய இரண்டு ஆண்டுகள், பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் எடுத்துக்கொண்டது. இந்தக் காலகட்டத்தில், அது 165 நாட்கள் கொண்ட பதினொரு அமர்வுகளை நடத்தியது; இதில் 114 நாட்கள் வரைவு அரசியலமைப்பு குறித்த விரிவான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டன. அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மாகாண சட்டமன்றங்களால் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகவும், மன்னராட்சி சமஸ்தானங்களில் அதன் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம், அரசியலமைப்பு சட்டமானது பிரதிநிதித்துவ அடிப்படையிலும் ஆலோசனையின் அடிப்படையிலும் வடிவமைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

  • 15 ஆகஸ்ட் 1947: இந்தியா சுதந்திரமடைந்தது

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியா சுதந்திரமடைந்தன் மூலம், ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு கால காலனியாதிக்க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த அதிகார மாற்றம், நாடு முழுவதும் உள்ள தலைவர்கள், சுதந்திர இயக்கங்கள், சாமானிய மக்களால் வழிநடத்தப்பட்ட நீண்ட, தொடர்ச்சியான சுதந்திரப் போராட்டத்தின் இறுதி நிலையைக் குறித்தது. சுதந்திரம் இந்திய மக்களுக்கு அரசியல் இறையாண்மையை மீட்டுக் கொடுத்ததுடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்புமிக்க பணியையும் வழங்கியது. புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் தேசமான இந்தியா, தனது எதிர்காலத்தை ஜனநாயகக் கொள்கைகள், ஒற்றுமை, உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கத் தொடங்கியது.

  • 26 நவம்பர் 1949: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்த விரிவான விவாதங்களுக்குப் பிறகு, அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949  நவம்பர் 26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதில் மிக முக்கியமான பணி நிறைவடைந்ததைக் குறித்தது. அரசியலமைப்பின் இந்த வரைவுச் செயல்முறையானது, இந்திய அரசின் தன்மை; குடிமக்களின் உரிமைகள், கடமைகள்; அரசாங்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை; சமூக நீதி, சமத்துவத்திற்கான பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்த விரிவான விவாதங்களை உள்ளடக்கியிருந்தது. ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்பு கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட  ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்த கூட்டு முயற்சியின் உச்சமாக அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வு திகழ்ந்தது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியான நவம்பர் 1949, 26’  முகவுரையின் இறுதி வரியில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வாயிலாக,ந்த தினத்தின் அரசியலமைப்பு அதிகாரம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றை உணர முடிகிறது.

  • 26 ஜனவரி 1950 – அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது

1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ​​இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக முறைப்படி நிறுவப்பட்டது. இது சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியின் தொடக்கத்தைக் குறித்தது. 1976-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம், 'சமூகவுடைமை (சோசியலிசம்) மற்றும் மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட, சோசியலிச, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக மாற்றம் பெற்றது. புதிதாக இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், இந்திய அரசாங்கச் சட்டம் 1935-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டு, அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஜனநாயக கட்டமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதுடன், நாட்டின் இறையாண்மை அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு ஜனவரி 26 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு திட்டமிடப்பட்ட முடிவாகும். ஏனெனில், அந்தத் தேதி 1930-ம் ஆண்டின் பூரண சுயராஜ்ஜிய கொண்டாட்டத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் குறிப்பதாகும்; இந்திய சுதந்திர வரலாற்றில், ‘முழுமையான சுதந்திரம் தேசத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தேதியில், இந்திய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்து, சுதந்திரப் போராட்டத்தின் அரசியல் பேரார்வங்கள் அரசியலமைப்பு அடிப்படையிலான குடியரசின் நிறுவனக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டன.

இன்று குடியரசு தினம்: தேசிய கொண்டாட்டமும் உயிர்ப்புடன் உள்ள அரசியலமைப்பு விழுமியங்களும்

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், வண்ணமயமான நிகழ்ச்சிளும்  அழகிய நினைவுகளும் ஒன்றிணையும் தேசிய அளவிலான நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் புதுதில்லி முதல் நாட்டின் தொலைதூர பகுதிகள் வரை, இந்த நாளில் நடைபெறும் மூவண்ணக்கொடிற்றும் நிகழ்வுளும் ஆயுதப் படைகள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்புகளும் இந்நாளை முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக மாற்றுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் மிகவும் பிரம்மாண்டமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான புதுதில்லி கடமை பாதையில் நடைபெறும் அணிவகுப்பு, நாட்டின் கலாச்சார பாரம்பரியம், இராணுவ வலிமையின் பன்முகத் தோற்றம் ஆகியவற்றின் வண்ணமயமான வெளிப்பாடாகும். நாட்டிற்காக வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் கம்பீரமாஅஞ்சலி செலுத்துவதுடன் இந்நாள் தொடங்குகிறது.

டமை பாதையில், இந்தியக் குடியரசுத் தலைவரின் வருகை குடியரசு தின நிகழ்வுகள் முறைப்படி தொடங்குவதைக் குறிக்கிறது. தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்கப்படுவது அணிவகுப்பின் தொடக்கத்தை உணர்த்துகிறது. முப்படைகளான இராணுவம், கடற்படை, விமானப்படையும், பிற சீருடைப் படைக்குழுக்களும் விழாக்கோல அணிவகுப்பில் செல்வது, ஒழுங்குடன் ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும். பாதுகாப்பு படை உபகரணங்கள், ஆயுதங்கள், ரோபோக்களின் அணிவகுப்பும் இந்த கண்கொள்ளாக் காட்சிக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இந்த அணிவகுப்பின் ஒரு பிரத்யேக அம்சம், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அமைச்சகங்கள் ஆகியவை சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளாகும். இவை பிராந்திய கலாச்சாரம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருள்களை எடுத்துக்காட்டுகின்றன. ஊர்வலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கலாச்சார நிகழ்ச்சிகளும், இந்தக்காட்சிக்கு மேலும் மெருகூட்டுகின்றன. நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதும், இராணுவ வீரர்களுக்கும் குடிமக்களுக்கும் வீர தீர விருதுகளை வழங்குவதும் இந்த அணிவகுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சியும் இந்திய விமானப்படையின் வான்சாகச நிகழ்வும் இந்த அணிவகுப்பை மேலும் பிரம்மாண்டமானதாக மாற்றுகின்றன.

குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் சில நாட்களுக்குப் பிறகு ஜனவரி 29 அன்று நிறைவடைகின்றன. இது 'பாசறைக்கு திரும்புதல் (பீட்டிங் தி ரிட்ரீட்)' விழா என்று அழைக்கப்படுகிறது. வெற்றிச் சதுக்கத்தில் (விஜய் சௌக்) நடைபெறும் இந்த நிகழ்வு, குடியரசு தின கொண்டாட்டங்கள் முறைப்படி நிறைவடைவதைக் குறிக்கிறது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இராணுவ மரபான 'பீட்டிங் ரிட்ரீட்' விழாவில், சூரியன் மறையும் பொழுது 'ரிட்ரீட்' ஒலித்தவுடன், படைகள் போரை நிறுத்தி, தங்கள் ஆயுதங்களை உறையிலிட்டு, போர்க்களத்திலிருந்து பின்வாங்கி முகாம்களுக்குத் திரும்புவார்கள்.

 

****

VJ/PD

(Features ID: 157747) आगंतुक पटल : 19
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam
National Portal Of India
STQC Certificate