• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Others

சர்தார் படேல் – இந்தியாவை ஒருங்கிணைத்த மனிதர்

Posted On: 30 OCT 2017 5:15PM

                                                                                                                                                                                                                 

*ஆதித்ய திவாரி

 

சர் ஜான் ஸ்ரேச்சே என்ற பிரிட்டிஷ் இந்திய சிவில் ஊழியர் தனது சிவில் ஊழியர்கள் பயிற்சியில் இப்படித்தான் கூறுவாராம்: “இந்தியா வைப் பற்றி அறிந்து கொள்வதில் முதலாவதும் முக்கியமானதுமான விஷயம் இந்தியா என்ற ஒன்று இருக்கவில்லை; எப்போதும் இருந்ததுமில்லை“. வரலாற்றறிஞர் டேவிட் லுட்டென் தனது “முரண்படும் தேசம்: இந்தியாவில் மதம், சமூகம் மற்றும் ஜனநாயகத்தின் அரசியல்“ என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார்: ”இந்திய நாகரிகத்தின் நிலப்பரப்பு என்று நாம் குறிப்பிடப்பயன்படுத்தும் பகுதி அரசியல் ரீதியாக பிரிட்டிஷ் பேரரசால் சித்திரிக்கப்பட்டதாகும். நிலவியல், மக்கள் தொகை அல்லது கலாச்சார ரீதியில் இன்றிருப்பது போல் 1947 க்கு முன் இந்தியா ஒரு போதும் இருந்ததில்லை” வின்ஸ்டன் சர்சில் போன்ற பலர், சுதந்திரத்திற்குப் பின், இந்தியா சிதைந்து விடும், மத்திய காலத்தின் நிலைமைக்குச் சென்றுவிடும் என்று ஆரூடன் கூறினார்கள்.

சுதந்திரம் அடைந்தபின் இந்தியா மாபெரும் சவால்களை சந்தித்த்து. இந்தக் கால கட்டத்தில் தலைவர்கள் சந்தித்த மிகப் பெரிய சோதனைகளில் ஒன்றாக இருந்தது. காலம் காலமாக மக்களிடையே பழகிப்போயிருந்த நிலவியல் ஞானம் நிலத்தின் எல்லையை வரையறுப்பதாகும்’பல நூறு ஆண்டுகளாக சமயச் சான்றோர்களின் அடிச்சுவட்டில் வளமாக ஆளப்பட்டதாக’ பாரதம் பூமி இருந்துள்ளது என்று இந்தியா – ஒரு புனித பூகோளம் என்ற நூலில் டியானா எல். எக் கூறுகிறார். இந்தியாவின் ஒற்றுமை உணர்வு குறித்து பண்டிட் ஜவஹர்லால் நேரு எழுதும் போது அது ஒரு உணர்ச்சிகர அனுபவம் என்கிறார். இந்தியாவின் விவசாயிகள் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் அனுபவம் குறித்து ”இந்தியாவைக் கண்டடைந்தேன்” என்ற நூலில் அவர் விவரிக்கிறார்: ”இந்தியாவின் முழுமையைப் பற்றி அவர்களை சிந்திக்க வைப்பதற்கு நான் முயற்சி செய்தேன். அந்தப் பணி எளிதாக இருக்கவில்லை; இருப்பினும் நான் கற்பனை செய்தது போல் மிகச் சிரமமாகவும் இருக்கவில்லை, நமது தொன்மையான காப்பியங்கள் புராணங்கள் இதிகாசங்களை அவர்கள் நன்கு அறிந்திருந்தால் நாட்டைப் பற்றிய கோட்பாட்டை அவர்களுக்கு அவை எளிதாக்கின“

இந்தியாவை மறுநிர்மாணம் செய்யும் பணி பிராந்திய ரீதியாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் மிகப் பெரிதாக இருந்தது. ஒட்டு மொத்த தேசமும் வன்முறைக் காலத்தை நோக்கிச் சென்றது. பிளவுபட்ட தேசத்தை விரும்பிய சக்திகள் இதனைச் செய்தன. பிரிட்டிஷ்காரர்கள் சென்றபின் இரண்டு தேசங்கள் இருக்குமா அல்லது பல்வேறுபட்ட 565 தேசங்கள் இருக்குமா என்ற மிகப் பெரிய கேள்வி பிரிவினை காலத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில், இந்தியாவை மறுநிர்மாணம் செய்யும் பொறுப்பு இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் திறன்மிக்க கரங்களில் விழுந்தது

 

உடல் நலபதிப்பு வயது ஆகியவற்றையும் தாண்டி, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும் மிகப்பெரிய நோக்கம் குறித்த பார்வையை சர்தார் படேல் இழந்துவிடவில்லை. இந்த மகத்தான பணியில் சர்தார் படேலுக்குத் திறனுடன் உதவி செய்த வி.பி. மேனன், இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பு வரலாறு என்ற நூலில் எழுதுகிறார்: “இந்தியா என்பது நிலவியல் ரீதியாக ஒன்றாக இருக்கிறது. ஆயினும் அதன் நீண்ட. பல வண்ண வரலாறு முழுவதும் அரசியல் ரீதியான ஒருமுகத்தன்மையைப் ஒரு போதும் பெற்றதில்லை. இன்று, நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக ஒற்றை மத்திய அரசின் உத்தரவு கைலாஷிலிருந்து கன்னியாகுமரி வரையும் கத்தியவாரிலிருந்து காமரூபா (அசாமின் பழைய பெயர்) செல்கிறது”. இந்த இந்தியாவை உருவாக்குவதில் சர்தார் படேல் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.

இந்தியாவை, இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு நிலப்பகுதிகளாகப் பிரிப்பது பற்றிய ஜுன் 3 திட்டத்திற்கு காங்கிரஸ் தனது ஒப்பதலை அளித்தது. இந்தியா அப்போது பிரிட்டிஷ் ஆக்ரமித்த நிலப்பகுதி 565 சமஸ்தானங்கள் என்ற கலவையாக இருந்தது. இரண்டு தேசங்களுல் ஒன்றில் இணைவதா அல்லது சுதந்திரமாகவே இருப்பதா என்பதற்கிடையே ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிலையில் சமஸ்தானங்கள் இருந்தன. திருவாங்கூர், ஹைதராபாத், ஜுனார்கட், போபால் காஷ்மீர் போன்ற சில சமஸ்தானங்கள் இந்திய அரசுடன் இணைவதில் தயக்கம் காட்டின. குவாலியர், பிகானீர், பரோடா, பாட்டியாலா போன்ற மற்ற சில இந்தியாவில் இணைவதில் ஆர்வம் காட்டின.

’நல்ல அகில இந்திய சேவைப்பணியை நீங்கள் பெற்றிரக்காவிட்டால் ஒன்றுபட்ட இந்தியாவைப் பெற முடியாது’ என்பதை சர்தார் படேல் அறிந்திருந்தார். எனவே மாநிலங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு முன் ’இரும்புச் சட்டகம்’ அல்லது இந்திய சிவில் சர்வீஸ் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தினார்.  சமஸ்தானங்களுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்த சர்தார் படேல் ஓய்வின்றி பாடுப்பட்டார். ஆனால் தேவைப்படும் போது சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளை செயல்படுத்தவும் தயங்கவில்லை. பல்வேறு ஆட்சியாளர்களின் கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் உள்ளடக்கும் வகையில் இணைப்புகான ஒப்பந்தங்களை வி.பி. மேனன் உதவியுடன் சர்தார் படேல் வடிவமைத்தார்.

அரசியல் நிர்ணய சபையில் இணையமறுக்கும் சமஸ்தானம் எதிர அரசாகக் கருதப்படும் என்று 1947 மே மாதம் அறிவித்த நேருவின் அணுகுமுறையோடு ஒப்பிடும் போது சர்தார் படேல், வி.பி. மேனன் ஆகியோரின் அணுகுமுறை மிகுந்த இணக்கத்துடன் இருந்தது. 1947 ஜூலை 5 அன்று சர்தார் படேல் அறிவித்த இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கை அறிக்கையில் இத்தகைய அச்சுறுத்தல்கள் இல்லை.

அரசியல் ரீதியாக இந்த பூமியை மறு கட்டமைப்பு செய்வது மட்டும் போதுமானதல்ல என்ற உண்மையில் படேல் கவனத்தோடு இருந்தார். மனம் நொந்த இந்தியக் குடிமக்கள் கடந்த கால அடிமைத் தனத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் விழித்தெழுவதற்கு கிளர்ச்சியுறுவர் அவசியம் என்பதையும் அவர் உணர்ந்தார். இந்திய மக்கள் தங்களின் பன்முகக் கலாச்சாரங்களுடன் பகிர்ந்து கொண்ட பிணைப்பை அவர்களிடையே தூண்டிவிடுவது உடனடித் தேவையாக இருந்தது. அப்போதைய துணை பிரதமராக இருந்த சர்தார் படேல் சோமநாதர் ஆலயத்தை மிண்டும் கட்டுவதற்கு 1947 நவம்பர் 13 –ல் உறுதி பூண்டார். கடந்த காலங்களில் சோமநாதர் ஆலயம் பலமுறை இடிக்கப்பட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இந்த முறை அதன் அழிவிலிருந்து புத்தாக்கம் செய்வது இந்திய புத்தெழுச்சி வரலாற்றுக்கு அடையாளமாக இருக்கும். அப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் கோயில் கட்டுமானத் தொடக்கவிழாவில் பேசியது: சோமநாதர் ஆலயம் மறு கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் அந்த நாள் இந்த அடித்தளத்தின் மீதெழும் வீறார்ந்த கட்டுமானம் மட்டுமல்ல இந்தியாவின் வளத்திற்கான கட்டுமானம் உண்மையான வளத்தின் அடையாளமாக தொன்மைவாய்ந்த சோமநாதர் ஆலயம் இருக்கும் என்பது எனது கருத்தாகும்அவர்மேலும் கூறியது; அழிக்கும் ஆற்றலைவிட எப்போதும் மகத்தானது மறுகட்டுமான ஆற்றல் என்பதற்கு சோமநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்க சான்றாகும்.

     இந்திய நாகரிகத்தை புனர் நிர்மானம் செய்ததில் சர்தார் படேல் பங்களிப்பு செய்திருக்கிறார். “புதிய இந்தியாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தபோது சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு எழுதிய படேல் கடிதத்தின் வார்த்தைகள் எப்போதையும் விட கூடுதல் பொருத்துகிறது. “இந்திய வரலாற்றில் மிகச்சிறப்பு வாய்ந்த கட்டத்தில் நாம் இருக்கிறோம் பொதுவான முயற்சியின் மூலம் நாட்டைப் புதிய உச்சத்திற்கு நாம் உயர்த்த முடியும். அதே சமயம் ஒற்றுமையில் சுணக்கம் என்பது எதிர்பாராத சீர்குலைவுகளாய் நம்மை அம்பலப்படுத்திவிடும். பொதுநலநோக்கில் நாம் ஒத்துழைக்காவிட்டால் ஒன்றுபட்டு பணிபுரியாவிட்டால் அராஜகமும் குழப்பமும் நமது பெரியதும் சிறியதுமான அனைத்தையும் விஞ்சி ஒட்டுமொத்த அழிவுக்கு வழிவகுத்துவிடும் என்பதை இந்திய மாநிலங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கும் என்ற நான் நம்புகிறேன்…. பரஸ்பரம் பயனடைவதற்கான நட்புறவு என்று இயற்பண்பை அனுமதிப்பது நமது பெருமை மிகு சிறப்புரிமையாக இருக்கட்டும். இது உலக நாடுகளிடையே இந்தப் புனித பூமியை உரிய இடத்திற்கு உயர்த்தும். அனுமதி மற்றும் வளவாழ்வுக்கான உள்ளுறையாக நாட்டை அது மாற்றும்.

******

     இந்தக் கட்டுரையாளர் தற்போது இந்தியா ஃபவுண்டேஷனில் மூத்த ஆய்வறிஞராக இருக்கிறார்.

     இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களாகும்.

******

 

(Features ID: 150493) आगंतुक पटल : 56
Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate