• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Others

படேல்: வாழ்க்கை, செய்தி மற்றும் அவரது நிலையான பொருத்தப்பாடு

Posted On: 30 OCT 2017 11:15AM

*குரு பிரகாஷ்

”செயல் வழிபாட்டுக்குரியது, ஆனால் மகிழ்ச்சிதான் வாழ்க்கை. எவர் ஒருவர் வாழ்க்கையை மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்கிறாரோ அவர் இரக்கத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொள்கிறாரோ அவர் உண்மையிலேயே சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்”

 

இந்தச் செய்தி உலகைத் துறந்து தனது வாழ்க்கையை மகத்தான செயலுக்கு அர்ப்பணித்துக் கொண்டவரின் ஆழ்ந்த சிந்தனை என தவறாக எடுத்துக் கொள்வது எளிது. மேற்குறிப்பிட்டது இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் அரசியல் சார்பில்லாத மேற்கோள்களில் ஒன்று என்பதை நம்புவது சிரமம்.

 

 

 

 

இளமை வாழ்க்கையும் விவசாயப் போராட்டமும்

 

குஜராத்தின் கைரா மாவட்டத்தில் உள்ள நாடியாட் கிராமத்தில் லாட்பாய்- ஜாவேரிபாய் படேல் ஆகிறோரின் விவசாயக் குடும்பத்தில் ஐந்து சகோதர சகோதரிகளில் ஒருவராகப் பிறந்த வல்லபபாய்  சுதந்திரம் எனும் மகத்தான செயல்பாட்டிலும் சுதந்திர இந்தியாவின் ஒருமைப்பாட்டிலும் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது வளரும் பருவத்தில், உளவியலில் சிறப்பான தாக்கத்தை அவர் தாயார் ஏற்படுத்தினார். இயல்பான கிராமப்புற வாழ்க்கைக்கு ஏற்ப, தாயார் தனது அனைத்துக் குழந்தைகளையும் ஒன்று சேர்த்து ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கூறினார். இளம்பருவ படேலுக்கு இது ஆன்மீகத் தாக்கத்திற்கு வழிவகுத்த நிலையில் அவரது தந்தை விவசாய உலகத்தை அவருக்க அறிமுகம் செய்தார். இளம் வல்லபபாய் தனது தந்தையுடன் சேர்ந்து வயல்களுக்குச் சென்றார். அதன் தொடர்ச்சியாக விவசாயத்தில் இரண்டு முக்கிய அம்சங்களான நிலத்தை உழுவதிலும், கால்நடை பராமரிப்பதிலும் நிபுணர் ஆனார். இவ்வாறு அவரது விவசாய மரபு வழி மீது ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு முறை அமெரிக்க செய்தியாளர் ஒருவர் அவரது கலாச்சார (கல்சர்) நடவடிக்கைகள் பற்றிக் கேட்டார். அதற்கு அவர் இப்படி பதிலளித்தார். “ வேறு ஏதாவது கேளுங்கள். எனது கல்சர் அக்ரிகல்சர்.“ (எனது பண்பாடு வேளாண்மை என்று) படேல் சொல்லும் போது கல்சர் என்பதைக் கொண்டு சொல் விளையாட்டு செய்திருக்கிறார்.

 

படேலைப் பொது வாழ்க்கைக்குக் கொண்டுவந்தது. அவரது ஆரம்ப கால பயணத்தில் விவசாயத் தலைவராக நடத்திய போராட்டங்கள் தான் பொதுவாழ்க்கையில் அவரது எழுச்சிக்கும் அதைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கும் சாத்தியப்பட்டது. பரோடிலும் கேடாவிலும் நடத்திய வெற்றிகரமான சத்தியாகிரகங்கள் மூலமாகத் தான். தலைமைத்துவத்தில் அவரது தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகள் மற்றும் பொதுக் கருத்தைக் கட்டமைத்ததன் மூலம் வரி விதிப்பில் முறையற்ற அதிகரிப்பை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பிரிட்டிஷ் அரசை மண்டியிடச் செய்தது.

 

 

ராஜ தந்திரமும் அரசியல் மதி நுட்பமும்

 

வீரஞ்செறிந்த தலைமைத் துவத்தைக் கொண்டிருந்த சர்தார் படேல் விடுதலைப் போராட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்ததோடு  சுதந்திரத்தைத் தொடர்ந்து தேசிய மறு கட்டுமான திட்டத்திற்கும் வழி காட்டினார்.

 

“நாம் சுதந்திரம் பெற கடுமையாகப் பாடுபட்டோம்;  அதற்கு நியாயம் செய்ய நாம் மேலும் கடுமையாகப் பாடுபடவேண்டும்“

 

சுதந்திர இந்தியாவை வழி நடத்த அதன் குடிமை, ராணுவம் மற்றும்  நிர்வாக அதிகாரத்திற்கு வலுவான கட்டமைப்பு தேவை என்ற உண்மையை படேல் தெளிவாக உணர்ந்திருந்தார். ஒழுங்கமைக்கப்பட்ட தலைமை அடிப்படையிலான ராணுவம், முறையான அதிகார நிர்வாகம் போன்ற அமைப்பு வகையிலான நடைமுறைகளில் அவர் நம்பிக்கை வைத்தார். அவையே போற்றுதலுக்குரியவை என நிரூபிக்கப்பட்டன. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த லட்சத்தீவுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் சம அளவில் ஆர்வம் கொண்டிருந்ததால் சரியான நேரத்தில் லட்சத்தீவு துறைமுகத்திற்கு இந்தியக் கப்பற்படையை அனுப்பி வைத்தவர் தான் படேல். நமது அண்டை நாடுகள் மனதில் என்ன உறுதி கொண்டிருக்கிறது என்பதைக் ஊகிக்க முடிகிற ஒரு நாட்டால் மட்டுமே அதன் திட்டங்களில் வெற்றி பெற முடியும். மனத்தாங்கள் உள்ள இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சுதந்திரமான திபெத் இருப்பதன் பொருத்தப்பாட்டையும் கூட அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார். பண்டிட் நேருவுடன் அவர் கொண்டிருந்த கடிதத் தொடர்புகளில் இதனைக் காண முடியும்.

 

 

 

 

ஆர்எஸ்எஸ்சும் சர்தார் படேலும்

1949 ஜுலை 16 தேதியிட்டு டி. ஆர். வெங்கட் ராம சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில் சர்தார் படேல் கூறுகிறார்; “ முன் கூட்டியே சாத்த்தியமான சந்தர்ப்பத்தில் தடையை நீக்க நான் ஆர்வமாகவே இருந்தேன்…. காங்கிரஸ் தவறான வழியில்  செல்வதாக அவர்கள் நினைத்தால், காங்கிரசுக்குள்ளேயே இருந்து சீர்திருத்துவதுதான் ஒரே வழி என்று கடந்த காலத்தின் ஆர்எஸ்எஸ் சுக்கு நான் அறிவுரை கூறியிருக்கிறேன். “

 

மற்றொரு கடிதத்தில் ஆர்எஸ்எஸ சின் இரண்டாவது சர்சங்க காலக் எம்.எஸ்.கோல்வால்கர், சர்தார் படேலுக்கு எழுதுகிறார்: “வெங்கடராமாஜி போன்ற நண்பரகளை சந்திக்க நான் முடிவு செய்திருக்கிறேன். அவரை சந்தித்தபிறகு, நமது பணி தொடர்பாக ஆரம்பகட்ட விவரங்களை அறிந்த பிறகு, உங்களைச் சந்திக்க என்னால் இயன்றதை நான் செய்வேன். உங்கள் உடல் நிலை கொஞ்சம் நலிவுற்றிருப்பதை வருத்தத்தோடு அறிய வந்தேன். உண்மையில் இது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. உங்களின் திறமை மிக்க வழிகாட்டுதலும் சேவையும் நாட்டுக்கு மிக  அதிகம் தேவைப்படுகிறது. உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்குமாறு கடவுளை நான் பிரார்த்திக்கிறேன். உங்களை நான் சந்திக்க இயலும் காலத்திற்குள் உங்கள் உடல் நிலையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். இதயத்தின் மிக ஆழத்தில் சில உணர்வுகளை மொழியின் வழியாக வெளிப்படுத்த இயலாது.

 

“மோதல்கள் இல்லாத உரையாடல் என்ற எண்ணத்தில் திறந்த மனதோடு இருந்தார் சர்தார் என்ற உண்மையை நிறுவுவதாக இருந்த தகவல்கள் உள்ளன. ஆரவாரத்தை கடந்து தேவைக்கு ஏற்றதாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது சுதந்திர ஆய்வின் மூலமே இதனை சாத்தியமாக்க முடியும்.

 

“காந்தி, நேரு, படேல் என்ற மும்மூர்த்திகளில் சர்தார் வல்லபபாய் மட்டும் தன் முனைப்பு உள்ளவராக இருக்கிறார். இந்த மூன்றுபேரை மிகவும் முக்கியமானவர்கள் குறிப்பாக சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் உடனடியான அடுத்தக் கட்டத்திலும் படேல் பங்களிப்பு செய்திருக்காவிட்டால் தற்போதுள்ள இந்திய வரைப்படம் போன்ற ஒன்றை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அவர் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவின் பெரும்பகுதிகள் தீய நோக்கத்தோடு துண்டுதுண்டாகியிருக்கும். பெரும்பாலும் தனியொருவராகவே இப்படிப்பட்ட துண்டாடுதல் நிகழாமல் தடுத்தார். படேல் தனது மதிநுட்பம் வாய்ந்த கொள்கைகளை முழுமையாக அமலாக்க முடியாமல் போன ஒரு இடம் காஷ்மீராகும். அதற்கான விலையைத்தான் நாம் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்றோம். காந்திக்கு அடுத்தப்படியாக சில வேளைகளில் மகாத்மாவைவிடச் சிறப்பாக இந்தியாவின் அடித்தள தனித் தன்மைகளையும் பண்பாட்டையும் படேல் புரிந்து வைத்திருந்தார். சுதந்திரத்திற்குப்பின் ஒரு பத்தாண்டுகளாவது அவர் வாழ்ந்திருந்தால் இந்தியாவின் சிக்கலான பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சாத்தியமாகியிருக்கும். இந்தியாவை பாதுகாத்த மனிதர் என்று வெளிவரவிருக்கும் நூலின் ஆசிரியர் ஹிண்டோல் சென்குப்தா இவ்வாறு கூறுகிறார்

******

கட்டுரை ஆசிரியர் புதுதில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

****

 

(Features ID: 150463) आगंतुक पटल : 78
Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate