புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

மார்ச் மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீடு மற்றும் உபயோகம்-சார்ந்த குறியீட்டின் துரித மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)

Posted On: 12 MAY 2020 5:32PM by PIB Chennai

தொழில் உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள், ஆறு வாரங்கள் இடைவெளியுடன் ஒவ்வொரு மாதத்தின் 12ஆம் தேதியன்று (அல்லது அதற்கு முந்தைய வேலை நாளன்று), ஆதார முகமைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். தயாரிப்பு தொழிற்சாலைகள் / நிறுவனங்களிடம் இருந்து இந்த தகவல்கள் ஆதார முகமைகளுக்குக் கிடைக்கும். உலகளாவிய கோவிட்-19 பெரும்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து மார்ச் 2020இல் இருந்து அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய பொது முடக்க நடவடிக்கைகள் காரணமாக, தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வரும் தகவல் ஓட்டம் தடைப்பட்டது. இவற்றில் சில நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை இன்னும் தொடங்காததால், பதிலளிக்கும் விகிதம் வழக்கத்தை விட குறைவாக உள்ளது. இதைத் தொடர்ந்து துரித மதிப்பீடுகள் திருத்தப்பட்டு, தொழில் உற்பத்தி குறியீட்டின் திருத்தக் கொள்கையின் படி வருங்கால வெளியீடுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2020க்கான குறியீடு 12 ஜூன், 2020, வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள இணைய தொடரில் பார்க்கவும்       

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1623300

 

***



(Release ID: 1623528) Visitor Counter : 192