• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது; மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

Posted On: 28 SEP 2024 4:47PM by PIB Chennai

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், தூய்மையே சேவை பிரச்சாரத்தை மத்திய அரசு நாடு முழுவதும் இருவார விழாவாக கடைபிடித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை சிவானந்தா சாலையில் உள்ள டி.டி தமிழ் தொலைக்காட்சி வளாகத்தில், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  நடும் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று (28/09/24) பங்கேற்று மரக்கன்று நட்டுவைத்தார். பின்னர் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்து பரிசுகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 17 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தை  கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

தூய்மை இந்தியா இயக்கம் நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் மோடி  2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகுதூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை அமைத்துக் கொடுத்து, சுகாதாரக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு, திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த இயக்கம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்றார்.

தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  நட வேண்டும் திரு மோடி அழைப்பு விடுத்தர். அதன் அடிப்படையில் இன்று இங்கு மரம் நடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் தங்களை  ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும், பொருளாதாரத்தில் 10 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அதற்கு வலிமையான உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்காற்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை  மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தமிழகத்துக்கு இந்தாண்டு ரூ. 6300 கோடிக்கும் மேல் ரயில்வே பட்ஜெட்டில்  ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே நமது சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. சென்னை, திருச்சி விமானநிலையங்கள்  மேம்படுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலையமும் விரையில் விரிவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அமிர்த ரயில் நிலையங்கள் திட்டத்தில், சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள், நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. பழைய பாம்பன் பாலம் பழுதடைந்துள்ளதால், புதிய பாலம் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. விரைவில், அது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்துள்ளார், அவற்றின் மீது பிரதமர் உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பார்  என்றும் அமைச்சர் கூறினார்

  

 

  

 

  

***

AD /PKV/ KV



(Release ID: 2059849) Visitor Counter : 34


Link mygov.in