• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்திய தர நிர்ணய அமைவனம் தரநிலைகள் சம்பந்தமான கல்வித்துறை கூட்டு மாநாட்டை நடத்தியது

Posted On: 28 SEP 2024 4:18PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம்  (BIS) நாடு முழுவதும் உள்ள 92 கல்வி நிறுவனங்களுடனான தனது கூட்டாண்மையை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மூலம் வலுப்படுத்தியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கல்வி நிறுவனங்கள் தேசிய தரநிலைகளை உருவாக்குவதற்கான BIS தொழில்நுட்பக் குழுக்களில் தீவிரமாக பங்கேற்கவும், BIS வழங்கும் R&D திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் சர்வதேச தரப்படுத்தல் முயற்சிகளுக்கு பங்களிக்கவும் வழி வகுக்கின்றன.

இந்த முன்முயற்சியை மேலும் அதிகரிக்க, கணினி மற்றும் மின்னணுவியல் துறையின் கூட்டாளர் நிறுவனங்களின் டீன்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கான (HODs) மாநாட்டை BIS ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு 2024, செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

BIS இன் தென் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் ஜெனரல், விஞ்ஞானி-ஜி                  ஸ்ரீ பிரவீன் கன்னாவின் வரவேற்பு உரையுடன் மாநாடு தொடங்கியது. ஸ்ரீ ராஜீவ் ஷர்மா, விஞ்ஞானி-ஜி, தரநிலைப்படுத்தலின் துணை இயக்குநர் ஜெனரல், தரப்படுத்தல் செயல்பாட்டில் கல்வித்துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தும் வகையில், திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். தரப்படுத்தலில் கல்வித்துறையின் குறைவான பங்கேற்பு, நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் தரப்படுத்தல் தொடர்பின்மை  மற்றும் சர்வதேச தரப்படுத்தலில் சமநிலையான இந்தியக் கண்ணோட்டத்தின் தேவை போன்ற சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீமதி. ரீனா கார்க், விஞ்ஞானி ஜி மற்றும் LITD இன் தலைவர், சர்வதேச அளவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் IT யின் முக்கியத்துவத்தை விளக்கினார், ISO/IEC க்குள் உலகளாவிய தரப்படுத்தலில் BIS இன் பங்கை வலியுறுத்தினார். கல்வி மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தியாவை வழிநடத்துவதற்கான வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவது, தற்போதைய திட்டங்கள் குறித்து அவர் விவாதித்தார். அவரது விளக்கக்காட்சியானது உலகளாவிய தரப்படுத்தல் செயல்பாட்டில் இந்தியா பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. Smt Neha Yadav, Scientist-D, BIS-Academia ஒத்துழைப்பு மற்றும் வரவிருக்கும் பாதைக்கான எதிர்பார்ப்புகளின் மேலோட்டத்தை வழங்கினார்.

மாநாட்டின் போது, ஸ்ரீ மணிகண்டன் கே, விஞ்ஞானி , ஸ்ரீ ஆஷிஷ் திவாரி, விஞ்ஞானி டி மற்றும் ஸ்ரீ க்ஷிதிஜ் பத்லா, விஞ்ஞானி டி ஆகியோரால் தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த அமர்வுகள் கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைகளில் தரப்படுத்தலின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கின. . இதைத் தொடர்ந்து ஸ்ரீ கௌஷிக் தத்தா, விஞ்ஞானி மற்றும் ஸ்ரீ மணிகண்டன் கே, விஞ்ஞானி ஆகியோரின் தலைமையில் குழுப் பயிற்சி நடைபெற்றதுடிஜிட்டல் தீர்வுகளின் நேரடி விளக்கத்துடன் நாள் நிறைவு பெற்றது. ஸ்ரீமதி நேஹா யாதவ், விஞ்ஞானி டி, தரப்படுத்தலில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை விளக்கினார்.

கூட்டாளர் நிறுவனங்களின் டீன்கள் மற்றும் HoDகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், துடிப்பான விவாதங்களுக்கு பங்களித்தனர் மற்றும் அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தரநிலைப்படுத்தலைச் சேர்ப்பது போன்ற எதிர்கால ஒத்துழைப்புக்கான யோசனைகளைப் பரிமாறிக் கொண்டனர். இரண்டாம் நாள் அமர்வில் பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள்பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒத்துழைப்பை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

கல்வி நிறுவனங்களில் கற்பித்தல்-கற்றல் செயல்பாட்டில் தரப்படுத்தலின் முக்கியத்துவத்தையும், தரநிலைகள் குறித்த அறிவு இளம் தலைமுறையினரின் மனதில் தரமான உணர்வை எவ்வாறு பதிக்க முடியும்  என்பதையும் மாநாட்டின் போது நடைபெற்ற கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தின. இந்த மாநாடு தேசிய மற்றும் சர்வதேச தரப்படுத்தலின் தேவைகளுடன் கல்வி ஆராய்ச்சியை சீரமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையைக் குறிக்கிறது, இது இந்தியாவின் தரநிலைகள் உலகளாவிய முன்னேற்றங்களில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்கிறது..

  

 

  

***

AD / KV



(Release ID: 2059848) Visitor Counter : 17

Read this release in: English

Link mygov.in