• Skip to Content
  • Sitemap
  • Advance Search
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பு 2022-23 கரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.59 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது: 1.12 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

Posted On: 26 MAY 2023 2:22PM by PIB Chennai

விவசாயிகள் பயனடையும்  வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் நெல் கொள்முதல் கொள்கையை அரசு கடைப்பிடித்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

நடப்பு 2022-23 கரீப் சந்தைப் பருவத்தில் 22.05.2023 வரை 520.63 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,59,659.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 1,12,96,159 விவசாயிகள் பயனடைந்துள்னர்.

எஃ.ப் சி ஐ எனப்படும் இந்திய உணவுக் கழகம், மாநில அரசின் அமைப்புகளுடன் இணைந்து நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்கிறது. கொள்முதல் நடவடிக்கைகளின் பெரும் பகுதி மாநில அரசுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளைச் சார்ந்ததாகும். 

 

******

AD/PLM/MA/KPG


(Release ID: 1927480) Visitor Counter : 174


Link mygov.in