சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜி20 நாடுகளின் இளம் தூதுவர்கள் உச்சி மாநாட்டில் தமிழக ஆளுநர், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு
Posted On:
20 MAR 2023 7:31PM by PIB Chennai
தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ஜி20 இந்திய தலைவரான (ஷெர்பா) திரு. அமிதாப் காந்த் ஆகியோர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற ஜி20 நாடுகளின் இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு - 2023 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசுகையில், இளம் தலைமுறையினரின் திறன்தான் வருங்காலத்தை பாதுகாக்க போகிறது என்றும், தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்து வந்த நிலையில், தற்போது ஜி20, பிரதமரால் கோவையிலேயே நடப்பது பெருமையாக உள்ளது என்றார்.
இந்தியா 200 கோடிக்கும் மேல் தடுப்பூசி தயாரித்து நமக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் வழங்கி வாருகிறது என்றும், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி அலைவரிசைகளை தூர்தர்ஷன் மூலம் இணைத்து கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இ-வித்யா திட்டத்தை தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
2014க்கு முன் குறைவாக இருந்த ஸ்டார்ட் அப் எண்ணிக்கை பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்ற பிறகு, இந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அதிகரித்துள்ளன என்று கூறினார். தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு கல்வியை போதிக்க வேண்டும் என்பதே தற்போதைய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்று தெரிவித்தார்.
இந்திய ஜி20 தலைவர் (ஷெர்பா) அமிதாப் காந்த் பேசியதாவது,
உலக அளவில் பொருளாதார தடுமாற்ற நேரத்தில் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது என்றும், ஆனால், தடைகளை நாம் வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா மற்ற நாடுகளை விட முதன்மையாக உள்ளது என்றும், பணப்பரிவர்த்தனை மட்டுமின்றி மற்ற சேவைகளிலும் டிஜிட்டல் பயன்பாட்டில் 50 ஆண்டுகளில் அடைய வேண்டிய நிலையை கடந்த 8 ஆண்டுகளில் அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளதால், ’பெண்கள் தலைமையிலான நாடு’ என்பதை பிரதமர் நோக்கமாக கொண்டுள்ளார் எனவும், நாட்டில் உள்ள பெண்களில் 80% பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர் எனவும் தெரிவித்த அவர், 2047 லிலும் இந்தியா அதிக இளம் தலைமுறையினரை கொண்ட நாடாக இருக்கும் என்றார்.
தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி பேசியதாவது:
தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் 7000 ஆண்டுகள் பழமையானது என்றும், இயற்கையோடு மனித குலம் மோதலை கடைபிடித்ததால், பல்வேறு பருவ கால பாதிப்பை சந்தித்து வருகிறோம் என்றும் கூறினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது ஏற்பட்ட பஞ்சத்தை நம் விஞ்ஞானிகள் அதனை மிக குறுகிய காலத்திலேயே சரி செய்தனர் என்று பேசினார்.
வளர்ந்த நாடுகள் கூட கொரோனா காலத்தில் கொரோனாக்கான தடுப்பூசியின் விலையை அதிகரித்தது. ஆனால், இந்தியா 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியது என்றார்.
இந்தியாவை மத்திய அரசு ஒரே குடும்பமாக பார்க்கிறது. அரசியல், மொழி கடந்து அனைவரும் சமம் என பிரதமர் பார்க்கிறார். இதனால் தான் மிகப்பெரிய மாற்றத்தை இந்தியாவில் மத்திய அரசால் நிகழ்ந்த முடிந்தது என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் பல திட்டங்களால் பெண் குழந்தைகள் எண்ணிக்கையில் அதிகரித்து உள்ளனர். அதுமட்டுமின்றி பல துறைகளில் சாதித்தும் வருகின்றனர் என தெரிவித்தனர்.
SM/TV/KRS
(Release ID: 1908915)
Visitor Counter : 151