• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் மேலாண்மை மற்றும் ஒழுங்கு முறைத் திட்டத்தின் கீழ் ரூ. 85.12 கோடி மதிப்பீட்டில்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு 

Posted On: 20 MAR 2023 6:21PM by PIB Chennai

நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை திட்டத்தின் முக்கிய பகுதியான தேசிய நீர்வள விவரங்கள் அறியும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரூ. 85.12 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று  மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் அடங்கும்.

 தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்  மேலாண்மைத் திட்டங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திரு எம் முகமது அப்துல்லா, தேசிய நீர்வள விவரங்கள் அறியும் திட்டத்தின் செயல்பாடுகள், குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை,  நிதி ஒதுக்கீடு போன்ற  விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு, தேசிய நீர்வள விவரங்கள் அறியும் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மேலாண்மை செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்களிப்போடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நிலத்தடி நீர் மேலாண்மைக்காக, எங்கெங்கு நிலத்தடி நீர் அமைப்புகள் உள்ளது என்பதை கண்டறிந்து, மேம்பாட்டு செயல்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நீர்வள விவரங்கள் அறியும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1,05,742, சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மொத்த நீர்வள விவர மண்டலங்கள் அமையப்பெற்றுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நீர் மேலாண்மைத் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908823

***

TV/GS/RS/KRS


(Release ID: 1908878) Visitor Counter : 114


Link mygov.in