இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2026 12:10PM by PIB Chennai
இந்தியாவின் முதல் ஒலிம்பிக் திரைப்படத்தை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். புனேவில் நடைபெற்ற 100-வது ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா, விளையாட்டு வீராங்கனைகள் மீராபாய் சானு, ஷீத்தல் தேவி, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தும் நோக்கில் ஒலிம்பிக்குக்குத் தயாராகும் இந்தியா என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, புனேவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சைக்கிள் பேரணியில் பங்கேற்றதாகத் தெரிவித்தார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஆரோக்கியமான இளைஞர்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
புனேவில் 25 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு மிதிவண்டிப் பேரணிகள் நடைபெற்றன. நீர் பாதுகாப்பு, ஆறுகளைத் தூய்மையாக வைத்திருத்தல், போதைப்பொருள் இல்லாத இந்தியா ஆகியவை தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான மை பாரத் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
2024 டிசம்பர் 17-ல் தொடங்கிய இந்த இயக்கத்தில் இதுவரை 100 வார நிகழ்ச்சிகளில் மொத்தம் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட மிதிவண்டிக் குழுக்கள் செயல்படுகின்றன. வாரந்தோறும் சுமார் 10 ஆயிரம் இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343402®=3&lang=1
****
SS/PLM/RJ