தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய தொழிலாளர் ஆணையர்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 1:09PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் ஆணையர் திருமதி சோனல் மிஷ்ரா, நவம்பர் 27-ம் தேதி புதுதில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தொழிலாளர் சட்டங்கள் 2020-ஐச் சிறப்பாகச் செயல்படுத்துவது, துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

மத்திய தொழிலாளர் ஆணையர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் நடத்தி வரும் தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் தலைமைப் பொது மேலாளர் திரு சி.கே. சின்ஹா பங்கேற்றார். கூட்டத்தில் தொழிலாளர் சட்டங்களின் முக்கிய அம்சங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான விதிகள், பதிவு, உரிமம் பெறுதல், டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள், துணை ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு நேரடியாகப் பதிவு, உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டது.  விபத்துகளைத் தடுக்கும் நடைமுறைகள், பாதுகாப்புப் பயிற்சிகள் குறித்த விவரங்களையும் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

பெண் தொழிலாளர்கள், பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோருக்கான சட்டப்பூர்வ நலன்களை உறுதிப்படுத்த, அது தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த முயற்சியைப் பாராட்டிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள், முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342985&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343049) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati