வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஜெய்ப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கான பயிலரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 9:25AM by PIB Chennai

இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மூலம், இந்தியப் பொருட்களுக்கு உலக சந்தையில், வாய்ப்புகள் விரிவடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (நவம்பர் 27) ஏற்றுமதியாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய வர்த்தகத் துறைச் செயலர் திரு ராஜேஷ் அகர்வால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சர்வதேசச் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இந்தியாவின் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி 16.66% வளர்ந்து 568.84 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 2026-27-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கு 1 லட்சம் கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஏற்றுமதி 2025-26-ல் 11.18 பில்லியன் டாலராக இருந்தது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனிலும் ஏற்றுமதி பயிலரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு பாரத் சிங் சௌத்ரி, மாநிலத்தின் ஏற்றுமதி 2017-18-ல் ரூ.10,836 கோடியாக இருந்தது எனவும், 2025-26-ல் ரூ.13,802 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 பிரிட்டனுடனான இந்திய ஒப்பந்தம் 99% பொருட்களுக்கும், ஓமனுடனான ஒப்பந்தம் 99.38% ஏற்றுமதிக்கும் வரியில்லா வாய்ப்பை வழங்குகின்றன. நியூசிலாந்துடனான ஒப்பந்தம் சிறு தொழில்கள், விவசாயிகள், பெண்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தருகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342953&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343003) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati