மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மீன் உற்பத்தி 198 லட்சம் டன்களை எட்டியுள்ளது: மீன்வளத்துறைச் செயலாளர் அபிலாக்‌ஷ் லிகி

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 4:14PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறைச் செயலாளர் அபிலாக்‌ஷ் லிகி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள மீன்வள அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தார். ‘மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறையில் இந்தியாவின் முன்னெடுப்புகள்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். மீன் வளத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வாய்ப்புகள், எதிர்கால திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்தியாவில் மீன்வளத்துறையில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார். 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 198 லட்சம் டன்களை எட்டியதாக குறிப்பிட்டார். சர்வதேச அளவில் மீன்கள் உற்பத்தியில் 8 சதவீத பங்களிப்புடன், உலகின் இரண்டாவது பெரிய மீன் வளர்ப்பு உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதாகவும் கூறினார். இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2025-26 நிதியாண்டில், 19.32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதாகவும்  மீன்வளத்துறைச் செயலாளர் அபிலாக்‌ஷ் லிகி தெரிவித்தார். இந்திய மீன்வளத்துறையானது, 3 கோடிக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் வளர்ப்போரின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறினார். தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், நிறுவனச்சூழலை வலுப்படுத்தவும் மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, மீன்வள அறிவியல் கல்லூரியில் உள்ள மீன் குஞ்சு பொரிப்பகங்கள், கண்காட்சி, அருங்காட்சியகம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342555&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342869) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi