ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ஆயுஷ் அமைச்சகத்துக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 5:07PM by PIB Chennai

புதுதில்லியில், 45-வது இந்திய சர்வதேச வர்த்தக் கண்காட்சி-2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வர்த்தகக் கண்காட்சியில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு, தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்குகள் மூலம், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை ஆயூஷ் அமைச்சகம் ஏற்படுத்தியது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை குறித்து அரங்குகளில் காட்சிப்படுத்தியதுடன் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ஆயுஷ் அரங்குகள், பார்வையாளர்களுக்கு இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. பாரம்பரியத்தின் மூலம், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குதல் என்ற தலைப்பில் சுகாதாரம், நலவாழ்வு, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதை அங்கீகரிக்கும் வகையில், இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், பொதுத்தொடர்பு, பாரம்பரிய பிரிவின் கீழ் ஆயுஷ் அமைச்சகத்திற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342620&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342821) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese