57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

'விர்ச்சுவல் பாரத்' என்ற புதிய முயற்சி குறித்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 6:27PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342813Views: 6

இந்தியாவின் பல்வேறு கலாசாரங்கள், மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்த கதைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'விர்ச்சுவல் பாரத்' முன்முயற்சி குறித்து, கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது.

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் திரு பாரத் பாலா, இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவனத்தின் துணைவேந்தரும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் கூடுதல் பொறுப்பு நிர்வாக இயக்குநருமான திரு தீரஜ் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் உண்மையான வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்து, அவர்களது கதைகளை வெளிப்படுத்துவதே திரைப்பட உருவாக்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என திரு பாரத் பாலா தெரிவித்தார்.

கிளவுட் தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தில் 143 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாசார, புவியியல் பன்முகத்தன்மையில் இதுவரை வெளிவராத ஏராளமான கதைகள் உள்ளன என்றும், அவற்றை முதலில் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் அடையாளம் கண்டு உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் தனித்துவமான கலாசார அடையாளங்களில் இருந்து திரைப்படங்கள் உருவாக வேண்டும் என திரு தீரஜ் சிங் தெரிவித்தார். திரைப்பட விழாக்கள் புதிய இயக்குநர்களுக்கு கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பகிரவும் வாய்ப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படைப்பாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கினாலும், மனித கற்பனை, படைப்பாற்றல் ஆகியவற்றை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியக் கதைகளை உலக அளவில் கொண்டு செல்ல உண்மையான அனுபவங்களும், படைப்புச் சுதந்திரமும் அவசியம் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342724&reg=3&lang=1

(Release ID : 2342724)

****

SK/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342813
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026