இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 3:27PM by PIB Chennai
நமது வீடுகளிலும், கைபேசிகளிலும் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான வெள்ளை எல்இடி-க்கள் அதிக ஆற்றல் திறன் கொண்டவை. ஆனால் இதில் சில குறைபாடுகள் உள்ளன. விலை உயர்ந்த, அரிதான கனிமங்களையும், உயர் வெப்பநிலை உற்பத்தி முறையையும் வெள்ளை எல்இடி-க்கள் சார்ந்துள்ளன. ஒருமுறை உருவாக்கப்பட்டால், வெள்ளை ஒளியின் தன்மை நிலையானதாகிவிடும் என்பதால், அதை சரிசெய்ய முடியாது. இந்நிலையில், வெள்ளை எல்இடி-க்களில் உள்ள குறைபாடுகளை, குறைந்த செலவில் எளிதாக சரிசெய்யக் கூடிய புதிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், நானோ படிகங்களை கொண்டு வெள்ளை ஒளியின் தன்மையை மேம்படுத்த முடியும் என கண்டறிந்துள்ளனர். இது பிரகாசமான, விலை குறைந்த, தூய்மையான அம்சங்களை கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பெங்களூருவில் உள்ள அறிவியல் மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தில்லி இந்திய தொழிநுட்பக் கழகத்துடன் இணைந்து வண்ணங்களை நிலைநிறுத்துவதற்கான இந்த உத்தியை உருவாகியுள்ளது. நிலையான, செலவு குறைந்த வெள்ளை ஒளி தொழில்நுட்பங்களை நோக்கிய முக்கியமான ஆய்வு இது என தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், இதை சந்தைப்படுத்துவதற்கு முன்பு, ஈயத்தின் நச்சுத்தன்மையை கையாளுவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342511=3&lang=1
****
SS/LN/SH