மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களவையின் முதல் தலைவரான ஜி வி மாவலங்கரின் பிறந்த தினம் - மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 1:45PM by PIB Chennai

மக்களவையின் முதல் தலைவரான திரு கணேஷ் வாசுதேவ் மாவலங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்துக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மக்களவைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

திரு மாவலங்கர் 1888 நவம்பர் 27-ம் தேதி அன்றைய பரோடாவில் (தற்போதைய குஜராத்) பிறந்தார். 1937-ல் அகமதாபாத் தொகுதியில் இருந்து பம்பாய் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 வரை அதன் தலைவராகப் பணியாற்றினார்.

1947-க்குப் பிறகு, இடைக்கால நாடாளுமன்றத் தலைவராகவும் பணியாற்றினார். 1952 மே 15-ம் தேதி முதல் மக்களவையின் தலைவராக ஒருமனதாக அவல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 பிப்ரவரி 27-ம் தேதி மறையும் வரை அப்பதவியில் சிறப்பாகச் செயல்பட்டார்.

அவரது தொலைநோக்குப் பார்வை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை நாடாளுமன்ற மரபுகளை உருவாக்கின. அவரது உருவப்படத்தை ஓவியர் திரு மாதவ் சதாவலேகர் வரைந்தார். அதை 1956 செப்டம்பர் 7-ம் தேதி அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342461&reg=3&lang=1  

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342739) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada