இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 9:52AM by PIB Chennai
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பின் 75-வது மையம் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இம்மையத்தைத் தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச மாநில வனம், சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் டாக்டர் அருண் குமார் சக்சேனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சத்ரபால் சிங் கங்வார், திருமதி சுருதி கங்வார், இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பின் தலைமை இயக்குநர் திரு அரவிந்த் குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.18.25 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரேலி மையம், ரோகில்கண்ட் பிராந்தியத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்குச் சிறந்த தளத்தை வழங்கும். நாடு முழுவதும் உள்ள 75 மையங்களில் 67 மையங்கள் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசில், இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பெருநகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தவிர்த்து, உள்ளூரிலேயே உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளைப் பெற இம்மையம் வழிவகுக்கும் என திரு ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342386®=3&lang=1
***
SS/PD/SH