தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 12:26PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இமாச்சலப் பிரதேச உரிமச் சேவைப் பகுதியின் கீழ் உனா, மண்டி, ஜோகிந்தர் நகர் ஆகிய நகரங்கள் மற்றும் உனா–மண்டி நெடுஞ்சாலை வழித்தடங்களில் செப்டம்பர் 15 முதல் 18, 2026 வரை நடத்திய தன்னாட்சி சோதனை ஓட்ட முடிவுகளை நுகர்வோரின் தகவலுக்காக இன்று வெளியிட்டுள்ளது.
373 கி.மீ நகரப் பகுதி, 225.1 கி.மீ நெடுஞ்சாலை, 6 முக்கிய மையங்கள் மற்றும் 5.2 கி.மீ நடைப் பரிசோதனை மூலம் ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் 2G/3G/4G/5G குரல் மற்றும் தரவுச் சேவைகளின் தரம் மதிப்பிடப்பட்டது.
நகரப் பகுதிகளில் சராசரி பதிவிறக்க வேகம் ஜியோ 5G-ல் 171.68 Mbps ஆகவும், ஏர்டெல் 5G-ல் 122.28 Mbps ஆகவும் பதிவாகியுள்ளது; மண்டி–உனா நெடுஞ்சாலையில் ஏர்டெல் 5G 209.58 Mbps வேகத்தை எட்டியது. அழைப்புத் துண்டிப்பு மற்றும் சிக்னல் இடைவெளிகள் குறித்த விவரங்கள் சேவை நிறுவனங்களிடம் பகிரப்பட்டு, www.trai.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341750®=3&lang=1
***
SK/NB/SU