நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சுரங்க வாரத்தையொட்டி பிப்ரவரியில் சுரங்கத் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 5:25PM by PIB Chennai

நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்தின் ஆதரவுடன் செயல்படும், தில்லி ஐஐடி-யின் அடல் தொழில் பாதுகாப்பு மையம், இந்திய சுரங்க வாரம் 2027-ன் ஒரு பகுதியாக தேசிய அளவிலான புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டில் கூட்டு செயல்பாட்டு நிறுவனமாக இணைந்துள்ளது.

மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த நிகழ்வு 2027 பிப்ரவரி 24 முதல் 26 வரை புதுதில்லி யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுரங்கத் துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்  இதில் பங்கேற்கச் செய்யும் பணியை தில்லி ஐஐடி மேற்கொள்ளும். இதற்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக அதன் தலைமைச் செயல் அதிகாரி திரு அலோக் பாண்டே செயல்படுவார்.

சுரங்கத் தொழில்நுட்பம், முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள், கனிம ஆய்வு, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், சுரங்கத் தொழில்துறை தானியங்கி மயமாக்கம், சுரங்கப் பாதுகாப்பு, பசுமைச் சுரங்கம், உள்ளிட்ட பிரிவுகளில் புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு நிகழ்ச்சியின் புத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சி அரங்கில், கண்காட்சிக்காக இலவசமாக இடம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2026 டிசம்பர் 15.

விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பிக்க இணைய தள இணைப்பு: https://forms.gle/hoRfFd3b7vCtJHSC8

சுரங்க வாரம் தொடர்பான இணையதளம்: https://www.indiaminingweek.org

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342033&reg=3&lang=1

***

SK/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342664) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu