மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயகம், தேசிய ஒற்றுமை, எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டமே அடித்தளமாக விளங்குகிறது: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 5:44PM by PIB Chennai

இந்தியாவின் ஜனநாயகம், தேசிய ஒற்றுமை, எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டமே அடித்தளமாக விளங்குகிறது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன தினத்தையொட்டி, புதுதில்லியில் உள்ள அரசியல் சாசன மாளிகையின் மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்களிடையே அவர் உரையாற்றினார். அரசியலமைப்புச் சட்டத்தைப் படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதன் கொள்கைகளைச் சிந்தனையிலும் அன்றாடச் செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள், இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் விவாதித்து, ஒருமித்த முடிவுகளை எட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகள் என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் சட்டங்களை உருவாக்குகிறது எனவும், நிர்வாகம் அவற்றைச் செயல்படுத்துகிறது என்றும், நீதித்துறை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் இளைஞர்கள் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார்.

தேசப்பற்று, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் அரசியலமைப்பின் மாண்புகளைக் கடைப்பிடித்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்றும் திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342080&reg=3&lang=1

***

SK/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342583) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada